Monday, May 20
Shadow

அண்ணாத்த – திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சதீஷ், ஜார்ஜ் மரியான், அபிமன்யு சிங், சத்யன், ரெடின் கிங்ஸ்லி, ஜகபதிபாபு, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன் நடிப்பில் வெளியாகியுள்ள அண்ணாத்த திரைபடத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.

தஞ்சாவூருக்கு அருகிலிருக்கும் சூரக்கோட்டையைச் சேர்ந்த காளையன் (ரஜினிகாந்த்) பல ஊருக்கு பிரெசிடென்ட். அவருடைய தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்). காளையனுக்கு தங்கையின் மீது அதீத பாசம்.

ஒரு கட்டத்தில் தங்கைக்கு தான் அடிக்கடி சண்டைபோடும் ஒருவரின் (பிரகாஷ்ராஜ்) மகனுக்கு கட்டிவைக்க முடிவுசெய்கிறார். ஆனால், திருமணத்திற்கு முதல் நாள் தங்கையைக் காணவில்லை. தங்கை தங்க மீனாட்சிக்கு என்ன ஆனது, அவருடைய பிரச்னைகளில் இருந்து அண்ணன் அவரை எப்படி மீட்கிறார் என்பது மீதிக் கதை.

தங்கை மீது உயிராக இருக்கும் அண்ணன், அவளுக்கு வரும் துன்பத்தை அவளுக்கே தெரியாமல் நீக்கி, அவளைக் காப்பாற்ற நினைக்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் ஒன் – லைன். ஆனால், அதற்கு தேர்ந்தெடுத்த கதையும் திரைக்கதையும் படு சொதப்பலாக இருக்கிறது.

படம் ஆரம்பித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஒரு திசையில் ஓடுகிறது. அந்த ஒரு மணி நேரத்தில் பல சம்பவங்கள் நடக்கின்றன. ஏழைகளின் நிலத்தை அடித்துப் பிடுங்கும் பிரகாஷ்ராஜுடன் அடிக்கடி சண்டை போடுகிறார் ரஜினி.

ஏற்கனவே பிரகாஷ்ராஜ்தான் வில்லன் என நினைத்துக்கொண்டிருந்த நமக்கு, இந்த புதிய வில்லனின் அறிமுகம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்த வில்லனுக்கு ஒரு வில்லன் இருக்கிறார்.

அது அந்த இரண்டாவது வில்லனின் அண்ணன் (ஜெகபதிபாபு). இந்த வில்லன் கொல்கத்தாவில் இருந்தாலும், ஆந்திராவில் செங்கல்சூளை நடத்தும் வில்லனைப்போல நடந்துகொள்பவர். இந்த மூன்றாவது வில்லனுக்கும் இரண்டாவது வில்லனுக்கும் ஆகாது. இப்படி பல வில்லன்கள் படத்தில் இருக்கிறார்கள்.

படத்தின் பிளஸ்:
ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படங்களிலேயே இந்தப் படத்தில்தான் ரஜினி மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார். காமெடி காட்சிகளிலும் சரி, சண்டைக் காட்சிகளிலும் சரி 90களின் ரஜினியைப் பார்க்க முடிகிறது. ரஜினியும் நயன்தாராவும் வரும் துவக்க காட்சிகள் நன்றாகவும் ரசிக்கும்படியும் இருக்கின்றன.

படத்தின் மைன்ஸ்:
நகைச்சுவைக் காட்சிகளில் சிரிப்பு வரவில்லை.

மொத்தத்தில் அண்ணாத்த ஒருமுறை பார்க்கலாம் என்ற ரகமே