Wednesday, October 27
Shadow

Tag: movie

அரண்மனை 3 திரைவிமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
இயக்குனர் சுந்தர் சி. இயக்கத்தில் நடிகர் ஆர்யா, நடிகை ராஷி கண்ணா இயக்கத்தில் வெளியாகி உள்ள அரண்மனை 3 படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். ஜமீன்தாராக இருக்கும் சம்பத், ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க செல்கிறார். சென்ற இடத்தில் மணப்பெண்ணான ஆண்ட்ரியாவின் அழகில் மயங்கி அவரை திருமணமும் செய்து விடுகிறார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் ஆண்ட்ரியா இறந்துவிடுகிறார். அந்த குழந்தை தான் ராஷி கன்னா. மனைவி ஆண்ட்ரியாவை இழந்ததால் மகள் ராஷி கன்னா மீது அதிக பாசம் இல்லாமல் இருக்கிறார் சம்பத். பள்ளிப் பருவத்தை எட்டிய ராஷி கன்னா, தனது அரண்மனையில் பேய் இருப்பதாக கூறி ஹாஸ்டலில் தங்குகிறார். படிப்பு முடிந்தபிறகே அரண்மனைக்கு திரும்புகிறார். இதற்கிடையே, அரண்மனையில் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க வருகிறார் ஆர்யா. ஜமீன்தாரின் உறவுக்காரர் சுந்தர்.சி.யும் வந்து சேர, திரைக்கதை விறு...

வினோதய சித்தம் திரை விமர்சனம் (ரேட்டிங் 5/5)

Latest News, Review
இயக்குநர் சமுத்திரக்கனி எழுதி இயக்கி நடித்திருக்கும் வினோதய சித்தம் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். தம்பி ராமையாவுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவருடைய மகன் தீபக் வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். தம்பி ராமையா தான் வேலை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வு பெறுவதில் முனைப்புடன் இருக்கிறார். தனக்குப் பதவி கிடைத்துவிடும் என்ற மகிழ்ச்சியில் வாகனத்தில் பயணம் செய்கிறார். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் இறந்துவிடுகிறார். தம்பி ராமையாவின் ஆன்மா சமுத்திரக்கனியைச் சந்திக்கிறது. தனது இரண்டு மகளுக்கும் திருமணம் செய்து வைக்கவேண்டும். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். எனவே தன்னை விட்டுவிடுமாறு தம்பி ராமையா சமுத்திரக்கனியிடம் கெஞ்சுகிறார். அதற்கு சமுத்திரக்கனி 90 நாட்கள் மட்டும் கால அவகாசம் தருகிறார். தம்பி ராமையாவுக்கு துணையாக சமுத்திரக்கனியும் செல்கிறார். அந்த 90 நாட்களில...

உடன்பிறப்பே திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
2டி எண்டர்டெயின்மெண்ட் சூர்யா-ஜோதி்கா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் உடன்பிறப்பே படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட படம். உயிருக்கு உயிரான அண்ணன்-தங்கை. தங்கையின் கணவர் நேர்மையானவர். அடிதடிகளை விரும்பாதவர். தன் மனைவியின் அண்ணன் கொஞ்சம் அடாவடி பேர்வழி. அதுவே இரு குடும்பத்தின் பிரிவுக்குக் காரணமாகிறது. பத்து, பதினைந்து ஆண்டுகளாகப் பேசாமல் பாசப்போராட்டம் நடத்தும் இரு குடும்பமும் இணைவது தான் கதை. புதுக்கோட்டை மாவட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், எங்குப் பார்த்தாலும் பசுமை. ஆனால் படத்தின் கதையில் பெரிய அளவில் வறட்சி. கதை என்பதை விடத் திரைக்கதையில் என்பது தான் பொருத்தமாக இருக்கும். அண்ணனாக சசிக்குமார், தங்கையாக ஜோதிகா, தங்கை கணவராக சமுத்திரக்கனி, வீட்டு வேலைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜோதிகாவின் 50வது ...

டாக்டர் – திரை விமர்சனம் (ஆரோக்கியமானவர். ) Rank 4.5/5

Latest News, Review
- நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்,  நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.  ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் வருண் (சிவகார்த்திகேயன்). அவர் தனது காதலி பத்மினியுடன் (பிரியங்கா அருள் மோகன்) இணைந்து குடும்ப வாழ்க்கையில் இணைய முடிவு செய்கிறார்.   துரதிருஷ்டவசமாக, அவரது வாவில் விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை, அவர்கள் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். பத்மினியின் தங்கை கடத்தப்பட்டதை அறிந்த வருண், டாக்டரின் கதை பிரிந்த தருணத்திலிருந்து தொடங்குகிறது. கடத்தல்காரனை டாக்டர் வருண் எப்படிக் கண்டுபிடித்து  ஒரு பெரிய கடத்தல் மோசடியைக் கண்டுபிடித்தார்? என்பதே படத்தின் மீதி கதை. சிவகார்த்திகேயன் தனது வழக்கமான கலகலப்பான நடிப்பைத் தவிர்த்து விட்டார். அவர் தனது பழக்கவழக்கங்களைத் தவிர்ப்பதற்காக, மிகவும் அமைதியான, அணுகுமுறையைப...

லிப்ட் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Latest News, Review
இயக்குநர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின், அம்ரிதா ஐயர், காயத்ரி ரெட்டி நடிப்பில் வெளியாகியுள்ள லிப்ட் திரைப்படத்தின் திரைவிமர்சனத்தை இங்கே காணலாம். ஐடி கம்பெனியில் வேலைபார்க்கும் குரு (கவின்) மற்றும் அதே நிறுவனத்தில் எச் ஆர்ஆக இருக்கும் ஹரிணி (அம்ரிதா) இருவருக்கும் ஆரம்பத்தில் மோதல் இருந்ததை அவர்களின் பிளாஷ்பேக் மீட்டிங்காக காட்டுகின்றனர். கவின் ஒரு பிராஜெக்டிற்காக பெங்களூரிலிருந்து டிரான்ஸ்ஃபர் ஆகி சென்னை நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அப்போது இரவு நேரத்தில் ஓவர் டைம் டியூட்டி பார்த்துவிட்டு வீடு திரும்ப லிப்ட் ஏறியதும் அங்கு பல அமானுஷயங்கள் நடக்கிறது. இதற்கிடையே கதாநாயகியும் லிப்டில் வரக் கவின் தான் லிஃப்டை பூட்டி அவரை பயமுறுத்துவதாக ஹரிணி நினைத்துச் சண்டையிடுகிறார். ஆனால், குரு நான் பூட்டவில்லை இங்குப் பல அமானுஷ்யங்கள் நடக்கிறது எனக் கூறியும் அதை ஹரிணி நம்பவில்லை. உடனே லிப்ட...

அனபெல் சேதுபதி திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, டாப்சி பன்னு, ஜார்ஜ் மரியன், மதுமிதா, சுப்பு பஞ்சு அருணாசலம், யோகி பாபு, சேத்தன், ராதிகா, தேவதர்ஷினி, சுரேகா வாணி, ஜெகபதிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள அனபெல் சேதுபதி படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு பௌர்ணமி தினத்தன்று யார் தங்கினாலும் இறந்து, அவர்களும் ஆவியாகிவிடுவார்கள். அந்த அரண்மனையில் கதாநாயகியும் அவளது குடும்பமும் வந்து தங்குகிறார்கள். அங்கே வசிக்கும் பேய்கள் ஏன் வெளியேற முடியவில்லை, அந்த அரண்மனையின் பின்னால் உள்ள மர்மம் என்ன என்பதுதான் 'அனபெல் சேதுபதி' படத்தின் கதை. படம் சுவாரஸ்யமாகவே துவங்குகிறது. பேய்களும் அறிமுகமாகின்றன. பேயாக வருபவர்களில் பலர் நகைச்சுவை நட்சத்திரங்கள் என்பதால், ஒ...

பிரண்ட்ஷிப் திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
இயக்குனர் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில், நடிகர் ஹர்பஜன் சிங், நடிகை லாஸ்லியா நடிப்பில் வெளியாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். ஹர்பஜன் சிங், சதீஷ் மற்றும் நண்பர்கள் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார்கள். இதே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஒரே ஒரு பெண்ணாக இவர்கள் வகுப்பறையில் வந்து சேருகிறார் அனிதா (லாஸ்லியா). சில நாட்களில் ஹர்பஜன் சிங், சதீஷ் ஆகியோருடன் நெருங்கிய நண்பராக மாறுகிறார் லாஸ்லியா. திடீரென்று சில நாட்களில் அவர் இறந்து விடுவார் என்ற தகவல் நண்பர்களுக்கு கிடைக்கிறது. இதனால் வருத்தமடையும் நண்பர்கள், லாஸ்லியாவின் ஆசைகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள். இறுதியில் லாஸ்லியாவின் ஆசை என்ன? நண்பர்கள் நிறைவேற்றினார்களா? லாஸ்லியாவுக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகனாக நடித்திருக்கும் ஹர்பஜன் சிங், படம...

கோடியில் ஒருவன் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Latest News, Review
இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஆத்மிகா நடிப்பில் நிவாஸ் கே பிரசன்னா மற்றும் அர்ஜுன் ஆகியோரை இசையில் உருவாகியுள்ள திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். கிராமத்தில் வசிபவர் விஜய ராகவன் (விஜய் ஆண்டனி). அவரது அம்மாவுக்கு கலெக்டர் அவரை ஆக்கி பார்க்க வேண்டும் என்பது ஆசை. தன்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னை வந்து ஹவுஸிங் போர்ட் பகுதியில் குடியேறுகிறார். அந்த பகுதியின் தரத்தை உயர்த்தவும் மக்களின் நிலையை உயர்த்தவும் சில வேலைகளை செய்ய இவருக்கு வில்லன்களால் சிக்கல்கள் உருவாகின்றன. இவற்றிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் கலெக்டர் ஆனாரா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்களம். விஜய் ஆண்டனி துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். ஆக்சன், எமோஷன் என இரண்டு மணி ஸ்கோர் செய்யும் விஜய் ஆண்டனி ரொமான்ஸில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம்...

துக்ளக் தர்பார் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5)

Latest News, Review
இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர்கள்  விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பகவதி பெருமாள் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். ஜே.கே. நகரின் அரசியல் பெரும்புள்ளி ராயப்பன் (பார்த்திபன்). அந்தப் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலனுக்கு (விஜய் சேதுபதி) ராயப்பனைப் போல ஆக வேண்டுமென ஆசை. எப்படியோ ராயப்பனை நெருங்கி, கவுன்சிலராகவும் ஆகிவிடுகிறார். இதற்குப் பிறகு, ராயப்பனும், சிங்காரவேலனும் சேர்ந்து ஒரு நில விவகாரத்திற்காக 50 கோடி ரூபாய் லஞ்சம் வாங்குகின்றனர். ஆனால், அது தொடர்பான ஆவணங்களை ஊடகங்களில் வெளியாகி விடுகிறது. மேலும் 50 கோடி ரூபாய் பணமும் காணாமல் போய் விடுகிறது. இதைச் செய்தது யார் எனத் தேட ஆரம்பிக்கிறார் ராயப்பன். அந்த நபர் யார், ஏன் இப்படிச் செய்கிறார் என்பது மீதிக் கதை. படத்தின் பிளஸ்: சத...

டிக்கிலோனா திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5)

Latest News, Review
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள படமான டிக்கிலோனா திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். இன்று நேற்று நாளை போன்ற டைம் டிராவல் கதையில் காமெடி கலந்து வெளியான படமே டிக்கிலோனா. முதல் காட்சியிலேயே ஹீரோயின் பிரியாவை (அனகா) காதல் திருமணம் செய்து கொள்கிறார் மணி (சந்தானம்). ஏழு ஆண்டுகளுக்கு பின் கணவன் மனைவி உறவில் தகராறு இருப்பதால் டைம் டிராவலில் போய் திருமணத்தை நிறுத்தப் பார்க்கிறார். அதே வாழ்க்கை திருமணம் நடக்காமல் வேறு பக்கமாக பயணிக்கிறது அந்த உறவும் சரியாக அமையாமல் போக அந்த சந்தானமும் மீண்டும் டைம் டிராவலில் ஏறி திருமணம் நடக்கும் நாளுக்கு வந்து விடுகிறார். பின்னர் மூவரும் சேர்ந்து எந்த வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுதான் கதை. எந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும் அதில் இன்பதுன்பம் இருக்கத்தான் செய்யும். அதிலிருந்து தப்பிக்கவே முடியாது...
CLOSE
CLOSE