Monday, October 13
Shadow

அறம் இரண்டாம் பாகம் நயன்தாரா இல்லை அவருக்கு பதில் பிரபல ஹீரோ

நயந்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘அறம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. சமூக பிரச்சியமை மையமாக வைத்து உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கியிருந்தார்.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தை கோபி நயினார் இயக்கப் போவதாக தகவல் வெளியான நிலையில், இப்படத்தில் சித்தார்த் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து இயக்குநர் கோபி நயினாரிடம் கேட்டதற்கு, தனது அடுத்த படம் குறித்து சித்தார்த்திடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை எதுவும் முடிவாகவில்லை. முடிவானதும் படம் குறித்த தகவல்களை வெளியிடுவோம், என்று தெரிவித்தார்.

மேலும், சித்தார்த்தை வைத்து இயக்க இருக்கும் படம் ‘அறம்’ இரண்டாம் பாகம் அல்ல. ‘அறம்’ இரண்டாம் பாகம் நயந்தாராவை வைத்தே இயக்கப்படும். சித்தார்த்தை வைத்து இயக்குவது முற்றிலும் மாறுபட்ட கதையாக இருக்கும், என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply