

தல அஜித்தை அமராவதி மூலம் அறிமுகம் செஞ்ச இயக்குனர் செல்வா, தலைவாசல், நான் அவன் இல்லை, தோட்டா உட்பட ஏகப்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இவர் போன 2017ம் வருஷம் வணங்காமுடி என்ற படத்தை ஆரம்பிச்சார். இதுலே அரவிந்த்சாமி, சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, கணேஷ் வெங்கட்ராம், சாந்தினி, தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் நடித்தனர். டி.இமான் இசையமைத்தார். மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரித்தார். இதன் ஷூட்டிங் தொடங்கி நடந்துகொண்டிருந்தது.
முக்கால்வாசி படம் முடிவடைந்த நிலையில் பைனான்ஸ் பிரச்னையால் படம் திடீரென்று நின்னு போச்சு.. யார் யாரோ ஏதேதோ எப்படியெல்லாமோ பேசியும் கிடப்பில் விழுந்து கிடந்துச்சு. ஒருக் கட்டத்துலே இந்தப் படத்தின் பைனான்ஸ் சிக்கல் பற்றி தென்னிந்திய திரைப்பட பைனான்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 10 நாட்கள் ஷூட்டிங் நடத்தினால் படம் முடிந்துவிடும் என்று இந்தப் பேச்சுவார்த்தையில் கூறப்பட்டு அதுக்கு தேவையான ஏற்பாடுகளை அவங்களே ஃபிரஷர் செஞ்சதாலே ஒரு வழியா ஷூட் முடிஞ்சிட்டதா அரவிந்த் சாமி ட்விட்டரில் பிட் போட்டிருக்கார்..
இதுக்கிடையிலே இந்த வணங்கமுடி பற்றி டைரக்டர் செல்வா-கிட்டே கேட்டப் போது, ‘எனக்கு அரவிந்த் சாமியை நீண்ட நாள்களாகவே தெரியும். ‘புதையல்’ படத்திலேயே நாங்க இருவரும் வேலைப் பார்த்திருக்கிறேன். ‘கடல்’ படத்தின் மூலம் அரவிந்த் சாமி ரீ என்ட்ரி கொடுத்தவுடனே அவரை வைத்து இந்தப் படத்தை பண்ண வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ‘தனி ஒருவன்’ படத்துக்கு முன்பாகவே இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் பற்றி நானும் அரவிந்த் சாமியும் டிஸ்கஷன் பண்ணியிருக்கிறோம். வணங்காமுடி எனக்கு 27வது படம்.
இது கமர்ஷியலுடன் சேர்ந்த த்ரில்லர் மூவி. போலீஸ் ஆஃபிஸராக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். சிம்ரனும் இந்தப் படத்தில் போலீஸ்தான். அவர் ஐ.பி.எஸ் முடித்த ஓர் உயர் அதிகாரி போலீஸாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அரவிந்த் சாமியின் மனைவி ரோல் செய்திருக்கிறார் ரித்திகா சிங் . நந்திதா இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். சாந்தனி மீடியாவை சேர்ந்த ஒரு பெண்ணாகப் படத்தில் வருவார்.
ஒரு போலீஸ் ஆஃபிஸரின் பத்து வருட கால வாழ்க்கை இந்தப் படத்தில் சொல்வதால், நிறைய கேரக்டர் படத்தில் இருக்கு. படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் அரவிந்த் சாமி வீட்டு சமையல்காரராக தம்பி ராமையா நடித்துள்ளார். தனி ஒருவன் படத்திற்குப் பிறகு அரவிந்த்சாமி, தம்பி ராமையா காம்போ இந்தப் படத்தில் நன்றாகயிருக்கும். அரவிந்த்சாமி நிஜ வாழ்க்கையில் அவரது பல கஷ்டங்களைக் கடந்து கெத்தாக நிற்கக்கூடிய ஒருவர். இந்த வயதிலும் ஃபிட்டாகயிருக்கக்கூடிய ஒருவர். அதற்கு ஏற்ற மாதிரி படத்திலும் நிறைய வித்தியாசங்களுடன் நடித்திருக்கிறார்” என்றவரிடம், ‘படத்திற்கு ஏன் ‘வணங்காமுடி’ என பெயர் வைத்தீர்கள் என்று கேட்டால், ‘’ஒரு அரசு வேலையில் இருப்பவர்கள் யாருடைய குரலுக்கும் இறங்காமல் வேலை செய்வது கஷ்டம். வளைந்து கொடுக்காமல் போகிறவர்கள் சிலரைத்தான் பார்க்க முடியும். அப்படியிருக்கும் சூழ்நிலையில் ஒரு நேர்மையான போலீஸ் ஆஃபிஸரைப் பற்றி பேசக்கூடிய படம் இது. நியாமாக இருக்கக்கூடிய ஒரு ஆஃபிஸர். அதனால்தான் படத்துக்கு வணங்காமுடி’’ என்று சொன்னவ்ரிடம் நீணட இடைவெளி குறித்து கேட்டப் போது ‘ இதெல்லாம் சினிமாவிலே சகஜதானே” என்று சொல்லி சிரிச்சார்
