
‘பரீட்’ படத்தில் போலீஸ் தீம் பாடல் – அருண்ராஜா காமராஜ் குரலில் அதிரடி!
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் உருவாகி வரும் ‘பரீட்’ (Buried) படம், அதன் கதைக்களத்தையும், தொழில்நுட்ப அம்சங்களையும் தாண்டி, இப்போது இசை மூலம் கூடுதல் கவனம் ஈர்க்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, இப்படத்திற்காக பாடியுள்ள போலீஸ் தீம் பாடல் தற்போது எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.
ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை, ‘வெப்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குகிறார். ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த , இந்தப் படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக மாறி, கதை முழுவதையும் தன் தோள்களில் சுமக்கிறார்.
அவருக்கு ஜோடியாக ஹைதராபாத்தைச் சேர்ந்த அக்சிதா மற்றும் நடித்துள்ளனர். மேலும், , , , ஜென்சன் திவாகர், வடிவேல் முருகன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
இப்படத்தின் இசையை அமைக்கிறார். சமீபத்தில் வெளியான டைட்டில் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்த கட்டமாக இசை வெளியீடுகள் படத்துக்கு புதிய உற்சாகத்தை தர இருக்கின்றன.
இயக்குநர் ஹாரூண் கூறுவதில், “வெற்றி போலீஸ் அதிகாரியாக எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் கதையின் மையமாக இருக்கும். அதற்கேற்ற மாதிரி, போலீஸ் வலிமையை வெளிப்படுத்தும் ஒரு தனி பாடல் தேவைப்பட்டது. அதற்காகவே அருண்ராஜா காமராஜை அணுகினோம்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பாடலின் வரிகளை, ‘ஸ்டவ் மேல கடாய்’ பாடல் மூலம் பிரபலமான ஜூனியர் நித்யா எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நடித்து வரும் ‘கர’ படத்திற்குப் பிறகு, தொடர்ந்து அருண்ராஜா காமராஜ் இந்தப் படத்திலும் தனது குரலை வழங்கியிருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.
படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் வெளியாக இருக்கும் முதல் சிங்கிள் பாடல், ‘பரீட்’ படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் உயர்த்தும் என படக்குழு நம்புகிறது.

Arunraja Kamaraj lends his voice for a powerful police theme song in ‘Buried’
The upcoming investigative thriller ‘Buried’ is steadily gaining attention—not just for its gripping storyline but now also for its music. A special highlight is the police-themed song sung by , which has already sparked curiosity among fans.
Produced by Dream House and Jain Creations, the film is written and directed by , who earlier directed Web. Actor , known for 8 Thottakkal, plays the lead role as an encounter specialist police officer, carrying the core of the story.
The film features Akshitha from Hyderabad and as the female leads. The supporting cast includes , , , Jensen Divakar, and Vadivel Murugan in key roles.
Music for the film is composed by . Following the positive reception to the recently released title look poster, the makers are now gearing up for the musical promotions.
Speaking about the song, director Haroon shared that the film showcases the intense actions of an encounter specialist, and they wanted a powerful track to reflect the strength and spirit of the police force. That’s why they chose Arunraja Kamaraj to render the song.
The lyrics are penned by Junior Nithya, who gained popularity during the pandemic with the viral song “Stove Mela Kadai.”
Interestingly, after contributing to ’s upcoming film ‘Kara’, Arunraja Kamaraj has now sung for ‘Buried’ as well, adding to the excitement.
With shooting already wrapped up, post-production work is currently in full swing. The first single from ‘Buried’ is expected to be released soon, further building anticipation for the film.
