
இன்று எல்லோரிடத்திலும் உள்ள மிகப்பெரிய கேள்வி ஜோதிடம் அறிவியலா? அல்லது ஆன்மீகமா? ஜோதிடத்தை நம்பலாமா? வேண்டாமா? என்பதுதான். கணக்கை பிரதானமாக வைத்து சொல்வதினாலும் சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்கள் உள்ளன என்பதும் அவை ஒவ்வொரு காலகட்டத்தில் இப்படித்தான் இயங்கும் என்று அறிவியல்பூர்வமாக சொல்வதினால் இது அறிவியல் என்பது ஓரளவு உண்மையே. ஆனால் இவற்றை அறிவியல்பூர்வமாக கண்டுபிடிப்பதற்கு முன்பே அதாவது மகாபாரத காலத்திற்கு முன்பே நம்மவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்று அறிவதினாலும் உணர்வதினாலும் இது ஆன்மீகமாக இருக்குமோ என்ற கூற்றை ஒட்டுமொத்தமாக மறுப்பதற்கில்லை.
எந்த வாதம் எப்படியாக இருந்தபோதிலும் ஜோதிடம் உண்மையில் ஒரு ஆன்மீக அறிவியலே என்பதில் எந்த ஐயப்பாடும் தேவையில்லை. ஜோதிடம் கற்றவர்கள் எல்லாம் சிறப்பாக அதை சொல்லுவார்களா என்றால் இறையுணர்வோடு, ஆழ்ந்த பக்தியோடு துள்ளிய கணக்கோடும் சொல்லப்படும் ஜோதிடம் சிறப்பாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. எனவே சரியாக கற்றறிந்தவரால் சொல்லைப்படும் ஜோதிடம் உண்மையே.
– ஜோதிடர் கிருஷ்ண வாசுதேவன்.