
அதர்வா முரளியின் இரட்டை வேட அதிரடி – ‘வலை’ திரைப்படம் புதிய பரிமாணத்தில் பழிவாங்கல் கதையை சொல்ல வருகிறது!
தமிழ் சினிமாவில் கதைக்குத் முக்கியத்துவம் அளிக்கும் நடிகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள அதர்வா முரளி, தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வரிசையில், ராது இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில், பெப்சி வி.எஸ். பாலமுரளி வழங்கும் ‘வலை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படியாக உருவாகி வருகிறது. இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், அதர்வா முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பதனால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியாகியுள்ள டீசர், படத்தின் கதை மற்றும் காட்சியமைப்புகள் குறித்து ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் பாராட்டுகளை பெற்ற ‘DNA’ மற்றும் ‘பராசக்தி’ படங்களுக்குப் பிறகு, அதர்வாவின் நடிப்புத் திறனை மேலும் வெளிப்படுத்தும் படைப்பாக ‘வலை’ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேஸ்வரம் பின்னணியில் அமைந்துள்ள இந்த திரைப்படம், சரா மற்றும் குட்டி எனும் இரு கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நகர்கிறது. இந்த இரு வேடங்களிலும் அதர்வா முரளி நடித்திருப்பது படத்தின் முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது. மீனவர் சமூகத்தின் வாழ்க்கை முறை பின்னணியாக இருந்தாலும், முழுக்க முழுக்க பழிவாங்கல் சிந்தனையை ஆராயும் உளவியல் பரிமாணம் கொண்ட கதையாக படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ரூபா மஞ்சரி மற்றும் வாணி போஜன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முரளி ஷர்மா, ஆடுகளம் நரேன், அர்ஜாய், ஜெயபிரகாஷ், அருள் டி. சங்கர், துளசி, மயில்சாமி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பழிவாங்கல் என்பது உண்மையில் நீதிக்கான பதிலடி தானா அல்லது அது மேலும் பிரச்சினைகளை உருவாக்குகிறதா என்ற கேள்வியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஜீவா சங்கர் தெரிவித்துள்ளார். எந்தவித அறிவுரைக் கோணத்திலும் இல்லாமல், சுவாரஸ்யமான மற்றும் ஈர்க்கக்கூடிய கதை சொல்லும் முறையில் இந்த கருத்து பார்வையாளர்களிடம் கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப ரீதியாகவும் ‘வலை’ திரைப்படம் வலுவான அணியைக் கொண்டுள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள நான்கு பாடல்கள் படத்தின் உணர்வை மேலும் உயர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தமான், சென்னை மற்றும் ராமேஸ்வரம் போன்ற பல்வேறு இடங்களில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இயக்குநர் ஜீவா சங்கர் ஒளிப்பதிவையும் கவனித்துள்ள நிலையில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தை சண்முகராஜா மேற்கொண்டுள்ள நிலையில், தயாரிப்பு வடிவமைப்பை கோபி பிரசன்னா செய்துள்ளார். ஸ்டன்னர் சாம் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். கார்த்திக் நேதா, மோகன்ராஜ் மற்றும் வாமனா பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் திரைப்படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
பழிவாங்கல் கதைகளை புதிய உளவியல் மற்றும் உணர்ச்சி கோணத்தில் அணுகும் முயற்சியாக உருவாகி வரும் ‘வலை’, பார்வையாளர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Atharvaa Murali’s Double-Role Surprise – ‘Valai’ Set to Present Revenge Drama in a Fresh Perspective!
Actor Atharvaa Murali, who has established himself as a performer known for choosing strong, content-driven scripts, is all set to take a significant step forward in his career with the upcoming film ‘Valai’. Produced by Radhu Infotainment and presented by Pepsi V.S. Balamurali, the film is directed by Jeeva Shankar. One of the major highlights of the film is that Atharvaa will be seen in a dual role for the first time, raising expectations among fans and cinema lovers.
The recently released teaser has already generated excitement, offering glimpses of the film’s visual style and storyline. Following the appreciation he received for his performances in DNA and the recently released Parasakthi, Valai is expected to further showcase Atharvaa’s versatility as an actor.
Set against the backdrop of Rameswaram, the film revolves around two characters named Sara and Kutty, both portrayed by Atharvaa Murali. While the story features the fishing community as a background, the film primarily explores the emotional and psychological layers of revenge.
The film features Roopa Manjari and Vani Bhojan as the female leads. The supporting cast includes Murali Sharma, Aadukalam Naren, Arjai, Jayaprakash, Arul D. Shankar, Thulasi, Mayilsamy, and Imman Annachi in important roles.
Director Jeeva Shankar revealed that the story is centered around a thought-provoking question — whether revenge can truly serve as justice or if it leads to further complications. He also stated that the film conveys this theme through an engaging and entertaining screenplay rather than a preachy narrative.
Technically, Valai boasts a strong team. The music is composed by Ghibran, who has created four songs that enhance the emotional tone of the film. Songs have been shot across scenic locations including Andaman, Chennai, and Rameswaram. Jeeva Shankar has also handled cinematography, while Sathish Surya has taken care of editing. The art direction is by Shanmugaraja, with production design by Gopi Prasanna. Action sequences are choreographed by Stunner Sam, and the lyrics are written by Karthik Netha, Mohan Raj, and Vaamana.
The shooting of the film has been completed, and it is currently in the final stages of post-production. The official announcement regarding the trailer, audio launch, and worldwide theatrical release date is expected to be made soon.
With its unique emotional depth and psychological take on revenge, Valai is anticipated to offer audiences a refreshing cinematic experience.
