Sunday, May 19
Shadow

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தினை தமிழக முதல்வர். திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்


தமிழ் சினிமாவி கடந்த 80 வருடங்களாக பாரம்பரியமிக்க நிறுவனமான AVM நிறுவனம் தமிழ் சினிமாவுக்கு ஒரு பல்கலைக்கழகம் என்று தான் சொல்லணும் இந்த நிறுவனத்தில் நடிக்காத நட்சத்திரங்கள் இல்லை. அதே போல நடிக்க ஆவலாக இருந்த நடிகர்களின் பட்டியலும் நீளும் இந்த நிறுவனம் பயன் படுத்திய பழைய பாரம்பரிய சினிமா கருவிகளுக்கு ஒரு அருங்காட்சியம் இன்று ஆரம்பித்து உள்ளனர்.

இந்த அருங்காட்சியததை தமிழக முதல்வர்*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்

*சென்னை, வடபழனி, ஏவிஎம் ஸ்டுடியோஸ், 3ஆவது அரங்கில் இன்று (07.05.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணியளவில் “ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தினை “(AVM Heritage Museum) திறந்து வைத்தார். அதோடு அருங்காட்சியததை முழுமையாக பார்வையிட்டார்.


இந்த அருங்காட்சியத்தில் AVM நிறுவனம் சினிமாவுக்கு பயன்படுத்திய பாரம்பரிய சினிமா கருவிகள் பழங்காலத்து கார் மோட்டார் பைக் லைட்ஸ் அரிய வகை காண கிடைக்காத புகைப்படங்கள் மற்றும் பல இந்த அருங்காட்சியத்தில் இடம் பிடித்துள்ளன. இந்த நிகழ்வில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் T.R. பாலு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. நடிகர் கமல்ஹாசன். நடிகர் சிவகுமார் இயக்குனர் S.P.முத்துராமன் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை AVM நிறுவனததின் தலைவர் சரவணன் அவர் மகன் குகன் பேத்த அருணா குகன் மற்றும் இயக்குனர் S.P.முத்துராமன் வரவேற்றனர்.

இந்த அருங்காட்சியத்தில் A.V. மெய்யப்ப செடடியார் பயன்படுத்திய கார் அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் படங்களில் உயோபடுத்திய பொருள்களும் இந்த அருங்காட்சியத்தில் இடம் பிடித்து உள்ளது. இந்த அருங்காட்சியத்தை பொது மக்கள் பார்வையிட முடியும் இதற்கான நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம் செவ்வாய்கிழமை விடுமறை .