Thursday, April 18
Shadow

ஐங்கரன் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகியுள்ள ஐங்கரன் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

2015ல் வெளிவந்த ‘ஈட்டி’ என்ற விளையாட்டை மையப்படுத்திய விறுவிறுப்பான ஆக்ஷன் படத்தை தனது முதல் படமாகக் கொடுத்து யார் இவர் எனக் கேட்க வைத்தவர் இயக்குனர் ரவி அரசு. அது போலவே அவருடைய இரண்டாவது படத்திலும் வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களுடன் கொடுத்து இந்தப் படத்தையும் பேச வைக்கிறார்.

மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்தவர் ஜிவி பிரகாஷ்குமார். நாமக்கல்லில் வசிக்கும் பிரகாஷுக்கு புதுப்புது கண்டுபிடிப்புகளைச் செய்வது வழக்கம். அப்படி பல தயாரிப்புகளை கண்டுபிடித்து அவற்றிற்கு உரிமம் பெற நடையாய் நடக்கிறார். ஆனால், அவருக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இதனிடையே, அவர்களது ஊரில் ஆழ்துளை குழாயில் விழுந்த ஒரு குழந்தையின் உயிரை தன்னுடைய கண்டுபிடிப்பால் காப்பாற்றுகிறார். அதோடு, வட இந்தியக் கும்பல் ஒன்று செய்யும் வைரக் கொள்ளையை தனது சாதுர்யத்தால் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

படத்தின் முக்கிய வில்லனாக வட நாட்டு கொள்ளையனாக சித்தார்த். தோற்றத்திலும், பார்வையிலுமே வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். முயன்றால் இன்றைய இளம் வில்லன்கள் பஞ்சத்தைப் போக்கலாம். ஜிவி பிரகாஷின் நண்பனாக காயலான் கடை வைத்திருக்கும் காளி வெங்கட். ஜிவி பிரகாஷின் அப்பாவாக ஆடுகளம் நரேன், லஞ்சம் வாங்கும் ஆய்வாளராக ஹரிஷ் பெராடி அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் பிளஸ்:
ஜிவி பிரகாஷின் நடிப்பு, பின்னணி இசை

படத்தின் மைன்ஸ்:
படத்தின் நீளம்

மொத்தத்தில் ஐங்கரன் படத்தை  ஒரு முறை பார்க்கலாம்.