
இளையதளபதி விஜய் கீர்த்தி சுரேஷ் சதீஷ் மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் பரதன் இயக்கத்தில் பைரவா படம் உருவாகிறது இந்த படத்தின் பாடல் காட்சி படபிடிப்புக்கு சுவிஸ்யில் இருந்து வந்த படக்குழு தொடர்ந்து நெல்லையில் இறுதி கட்ட படபிடிப்பு நடத்தி வருகிறது.
திருநெல்வேலி மையமாக அமைக்கப்பட்ட கதை தான் பைரவா இந்த படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு நெல்லையில் நடந்து வருகிறது கடந்த இரண்டு நாட்களாக படபிடிப்பு நடந்து வருகிறது அதுவும் தாமிரபரணி ஆற்றில் விஜய் திதி கொடுப்பது போல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் இங்கு ஐந்து நாட்கள் படபிடிப்பு நடக்கும் இது தான் இறுதி கட்ட படபிடிப்பு என்றும் இயக்குனர் பரதன் கூறியுள்ளார்.
