Tuesday, January 27
Shadow

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய ஃப்ளாக் திரைப்படம்

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பாராட்டிய ஃப்ளாக் திரைப்படம்

ஐ அண்ட் ஐ மூவிஸ் சார்பில் வைரப் பிரகாஷ் தயாரிப்பில் SP.பொன் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஃப்ளாக்.

இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி மக்கள் மனதில் பெரும் நன்மதிப்பை பெற்று வருகிறது..

இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் வைரப் பிரகாஷ் கூறுகையில்;

எங்கள்(I & I Movies)நிறுவனத்தின் முதல் படைப்பு ஃப்ளாக் ( FLAG). தமிழகத்தின் செங்கோட்டை முதல் டெல்லி செங்கோட்டை வரை ஒட்டுமொத்த இந்தியர்களின் அடையாளம் நமது தேசியக்கொடி.. இந்த ஒற்றை புள்ளியில் ஆரம்பித்து எல்லோர் இதயங்களிலும் ஒரு மிகப்பெரிய தேசிய உணர்வை.. மீண்டும் ஒரு முறையாவது இந்தியனாக பிறக்க வேண்டும் என்ற உணர்வை, ஒவ்வொரு பார்வையாளரின் இதயத்திற்கும் ப்ளாக் திரைப்படம் கொடுக்கும்.

ஃப்ளாக் திரைப்படம் 17 மாநிலங்களில் படம்பிடிக்கப்பட்டு இருப்பது பெருமைக்குரியது.

இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார் இயக்குனர் SP.பொன் சங்கர், இசை ராஜா ரவி வர்மா & பாலசுப்ரமணியம்,
மேலும் இப்படத்தில்
புகழ்பெற்ற பாலிவுட் திரைப்பட நடிகர் மிக்கி மஹிஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இட்லி கடை திரைப்படத்தில் சின்ன வயது தனுஷாக நடித்த தீஹான் மனதை நெகிழ வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் மாலிக், கிரீத்துவாரகேஷ், அபினவ் கோ சாமி, பபுஷா மற்றும் பலர் நடித்துள்ளனர் ..

 

ஃப்ளாக் திரைப்படத்தின் டிரைலரை பார்த்த கன்னட சூப்பர் ஸ்டார் திரு சிவராஜ்குமார் ஃப்ளாக் திரைப்படத்தை ஒவ்வொரு இந்தியரும் அவசியம் திரையில் கண்டு மகிழ வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.
மற்றும் தன்னுடைய பாராட்டுகளையும் வழங்கி உள்ளார். ஃப்ளாக் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற பெருவாரியான மொழிகளில் விரைவில் வெளியாக இருக்கிறது…