Sunday, September 8
Shadow

போட் திரை விமர்சனம்! Rank 3.5/5

சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள போட் படத்தின் திரை விமர்சனம்

படத்தின் கதை இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் நடக்கிறது. அதாவது1943ம் ஆண்டு சென்னையில் ஜப்பான் நாட்டு விமானங்கள் சென்னை மீது குண்டு போட உள்ளதாக தகவல் பரவுகிறது. அதனால் நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்தும் திறந்த வெளியில் தான் நடக்கிறது. மீனவரான யோகி பாபு சிறைக்கைதியான தனது தம்பியை காப்பாற்ற நினைக்கிறார். அப்போது விமானம் மூலம் குண்டு போட உள்ளதாக வதந்தி பரவ யோகி பாபு தனது பாட்டி தம்பியுடன் படகில் ஏறி தப்பிக்க நினைக்கிறார். தம்பி போலீசிடம் சிக்கிக் கொள்ள உயிருக்கு பயந்த சிலர் யோகிபாபு படகில் ஏறுகின்றனர். பிராமணரான சின்னி ஜெயந்த் தனது மகள் கௌரி கிஷனுடன் படகில் ஏறிக்கொள்கிறார். புலனாய்வு அதிகாரியாக எம்எஸ் பாஸ்கர், சேட்டாக சாம்ஸ், மலையாளியாக ஷாரா, தெலுங்கு பெண்ணாக மதுமிதா, ஆங்கிலேய அதிகாரி ஜெஸ்ஸி பாக்ஸ் ஆலன் என அனைவரும் படகில் ஏறிக்கொள்கின்றனர். இவர்களுக்குள் நடக்கும் சாதி, மத அரசியல் விவாதமே இப்படம்.

யோகி பாபு மீனவராக நன்றாக நடித்துள்ளார்.‌ஆனால் படம் முழுவதும் சென்னை எங்களுடையது நீங்கள் எல்லாம் பிழைக்க வந்தவர்கள் என சொல்லிக் கொண்டே இருக்கிறார். படம்‌ முழுவதும் இவர்களுக்குள் ஏற்படும் விவாதங்கள், வாக்குவாதங்கள், மோதல்கள் என படம் நகர்ந்தாலும் கதை நகரவில்லை. வசனங்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

ஒளிப்பதிவாளர் மகேஷ் மாணிக்கத்தின் உழைப்பு பாராட்டத்தக்கது. நடுக்கடலில் கேமரா வைத்து படமாக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஜிப்ரான் இசை முடிந்தவரை காப்பாற்ற முயற்சித்துள்ளது. சுதந்திர போராட்ட காலகட்டம், ஜப்பான் குண்டு, நிறைய காமெடி நடிகர்கள் என இருந்தும் கோட்டை விட்டுவிட்டார் இயக்குனர் சிம்புதேவன். மொத்தத்தில் போட் – போர். ரேட்டிங் 3/5