பிரதர் தீபாவளிக்கு வந்திருக்கும் நகைச்சுவை விருந்து என்று தான் சொல்ல வேண்டும். பொதுவா ஜெயம் ரவி படங்கள் என்றாலே அது குடும்ப கதையாக அதிகமாக இருக்கும் அந்த வகையில் இந்த படமும் ஒரு அக்கா தம்பி இருவர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் கதையாக அமைந்திருக்கிறது.
இந்த படத்தில் ஜெயம் ரவி பிரியங்கா மோகன் பூமிகா சாவ்லா ராவுரமேஸ் நட்ராஜ் சுப்பிரமணியன் சரண்யா பொன்வண்ணன் வி.டி.வி. கணேஷ் சதீஷ் சீதா மற்றும் பலர் நடிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் எம். ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் பிரதர்
ஜெயம் ரவி குடும்பத்தில் இவரும் இவர் அக்கா அம்மா அப்பா நான்கு பேர் அக்கா திருமணமாகி ஊட்டியில் வசித்து வருகிறார். ஜெயம் ரவி வக்கீல் படிப்புக்கு இறுதி ஆண்டு தேர்வு எழுதும் போது தேர்வு அரங்கில் இருக்கும் ஆசிரியர் தவறு செய்வது கண்டிக்கிறார். இதனால் அவர் வறுத்து எழுத முடியாமல் வக்கீல் ஆக முடியாமல் போகிறது இதனால் வேலை வெட்டி இல்லாமல் வீட்டில் சும்மா இருக்கிறார். அதோடு அவர் மனதில் எது தவறு என்று படுகிறதோ அதை உடனே சுட்டிக்காட்டுகிறார் இதனால் அவருக்கு ஏற்படும் ஒரு பின் விளைவுகள் தான் இந்த படத்தின் மையகரு சென்னையில் இவர் அடிக்கும் லூட்டியால் அவர் அப்பா அடிக்கடி டென்ஷன் ஆவது வழக்கம் ஒரு முறை அப்படி டென்ஷன் ஆவதினால் அவருக்கு பிபி அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள் அந்த நேரத்தில் அங்கு வரும் பூமிகா தம்பியை நான் ஊட்டிக்கு அழைத்துச் சென்று அவனை நல்ல மனிதனாக மாற்றி சென்னைக்கு அனுப்புகிறேன் என்று தன் தந்தையிடம் சொல்லி ஊட்டிக்கு அழைத்துச் செல்கிறார்.
ஊட்டிக்கு அக்காவுக்கு குடும்பத்தினருக்கு இவருக்கும் ஏற்படும் சிறுசிறு சலசலப்புகளால் இரு குடும்பமும் பெறுகிறது இதற்கு காரணம் ஜெயம் ரவி என்று பூமிகாவின் மாமனார் மற்றும் கணவர் நட்டி ஆணித்தரமாக சொல்கிறார்கள். ஜெயம் ரவி வீட்டை விட்டு வெளியேறினால் தான் நீங்கள் மறுபடியும் இந்த வீட்டுக்கு வர முடியும் என்று மாமனார் சொல்ல பூமிகா என் குடும்பத்தை அவமதித்த நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டால் தான் நான் மீண்டும் இந்த வீட்டுக்கு வருவேன் என்று வீட்டை விட்டு வெளியேறுகிறார். மறுபடியும் பூமிகாவை அந்த குடும்பத்துடன் எப்படி இணைக்கிறார் என்பதுதான் மீதி கதை,
ஜெயம் ரவி எப்போதும் போல அவர் இயல்பான நடிப்பின் மூலம் நம்மை கவருகிறார். அவர் அடிக்கும் லூட்டி நம்மை சிரிக்க வைக்கிறது. அதேபோல தான் தெரிந்த தவறுகள்தான் தன் அக்கா குடும்பம் பிரிந்து விட்டது என்று வருத்தப்படும் நேரத்திலும் மிகவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெயம் ரவி.
பிரியங்கா மோகன் நாயகியாக நடித்திருக்கும் இந்த படம் பெரியதாக ஒரு கதாபாத்திரம் இல்லை என்றாலும் தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு மிக அற்புதமாக பயன்படுத்தியிருக்கிறார்.
படத்தின் அடுத்த மிகவும் முக்கிய கதாபாத்திரம் என்று சொன்னால் அது பூமிகா சாவ்லா ஜெயம் ரவி அக்காவாக வரும் மூவி காட்சிகள் தன் தம்பியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் பாசத்துடன் இருப்பதால் தன் குடும்பமே அவரை விலகி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த இடத்திலும் தான் தம்பி தான் முக்கியம் அவருடன் கை கோற்கிரார்.
மாமனராக வரும் ரமேஷ் ராவ் மிக சிறந்த நடிப்பு மூலம் இந்த படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் அதேபோல நட்டி தனக்கு கொடுத்திருக்கும் கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார்.
சரண்யா கதாபாத்திரம் வி.டி.வி கணேஷ் சதீஷ் இவர்களின் கூட்டணியில் காமெடி அருமையாக அமைந்துள்ளது.
படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என்று சொன்ன ஆர் எஸ் ஜெயராஜ் இசையில் படத்தின் பாடல்கள் பின்னணி செய்யும் என்று சொல்லலாம் அதேபோல ஒளிப்பதிவாளர் விவேகானந்த சந்தோஷம் கண்ணுக்கு குளிர்ச்சியான ஊட்டியை நமக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
பொதுவாக ராஜேஷ் படங்கள் என்றால் ஒரு நல்ல சென்டிமென்ட் கதையோடு காமெடி கலந்து இருக்கும் ஆனால் இந்த படத்தில் ஒரு நல்ல அக்கா தம்பி செண்டிமெண்ட் கொடுத்திருக்கிறார் ஆனால் அவரின் முக்கிய பங்குக்கான நகைச்சுவையை கோட்டை விட்டு இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் இரண்டாம் பாகம் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருந்தால் படத்தின் சுவாரசியம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் பிரதர் குட் பிரதர்