Monday, May 20
Shadow

பிகினிங் – திரைவிமர்சனம் (Rank 2.5/5)

பிகினிங் திரைவிமர்சனம்

வினோத் கிஷன் கெளரி கிருஷ்ணா ரோஹிணி சச்சின் kpy பாலா மற்றும் பலர் நடிப்பில் வீரகுமார் ஒளிப்பதிவில் சுந்தரமூர்த்தி இசையில் ஜெகன் விஜயா கதை திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் படம் பிகினிங்

மனவளர்ச்சி இல்லாத இளைஞன் வினோத் அவரின் அம்மா ரோகிணி கணவனை பிரிந்து வாடும் ரோகிணி தன் மகன் வினோத்தை வளர்க்கிறார் இவருக்கு மனநிலை சரியில்லதவர் என்பதால் இவருக்கு தேவையானவைகளை செய்து வைத்து ஆபிஸ் போய்விடுவார். தனிமையில் வீட்டில் இருக்கும் இவருக்கு போன் மற்றும் டிவி தான் உலகம் அப்படி ஒருநாள் இவருக்கு ஒரு அழைப்பு கெளரி போன் செய்து என்னை மூன்று பேர் கடத்தி வைத்துள்ளனர். என்னை காப்பாற்று என்று கதருகிரார். இவர் மனம் நலம் குன்றியவர் என்பதால் பல கேள்விகளை கேட்டு உனக்கு உதவி செய்கிறேன் என்று உதவி செய்ய முயற்சிக்கிறார் இருந்தும் இவர் செய்யும் முயற்ச்சி அனைத்து வீன் ஆகிறது. இவரால் வீட்டை விட்டு வெளியே செல்லவும் முடியாது காரணம் வீடு பூட்டி இருக்கு கரண்ட் கட் எல்லாத்துக்கும் போலீசுக்கும் போக முடியாது காரணம் இவரின் முன்னாள் செயல்களால் போலீஸ் இவர் சொல்லும் எந்த விஷயத்தையும் நம்பமாட்டார்கள் இதையும் மீறி இவர் எப்படி கௌரியை காப்பாற்றினார் என்பது தான் மீதி கதை

இரண்டு வீடு தான் மொத்த படம் வினோத் மொத்தமே ஐந்து கதாபாத்திரங்களை வைத்து திரைக்கதை நகர்த்தி இருப்பது அருமை காப்பாற்றுவது எல்லாம் பழைய வித்தைகள் படம் ஆரம்பிக்கும் போதே இது தான் கதை என்று தெரிந்து விடுகிறது.

படத்தில் சபாஷ் என்று சொல்ல வேண்டிய விஷயம் என்றால் நடிகர்களின் நடிப்பு அதோடு திரைக்கதையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பம் காதலன் வருவது வந்தும் அவனால் பயன் இல்லை அது என் என்பதை திரையில் பார்த்தால் சுவாரிசம் இயக்குனர் பல விதத்தில் புதுமைகளை செய்ய முயற்சித்துள்ளார். அதற்கு பாரட்டனும்.

வினோத் மற்றும் கெளரி நடிப்பு படத்துக்கு பலம் அதே போல வில்லன் சச்சின் சிறந்த நடிப்பு குழந்தை முகத்தை வைத்து கொண்டு அற்புதமான வில்லத்தனம் செய்து இருக்கிறார்.

நடிகர்கள் பலம் இயக்குனர் சொன்ன விதம் நல்ல இருக்கு ஆனால் ஏதோ மிஸ்ஸிங் ஆகவே கொஞ்சம் இழுவை அதோடு படம் முழுக்க ஒரே சத்தம் அதும் நமக்கு இரைச்சலை தருகிறது

படத்தின் பிளஸ் நடிகர்கள்

மைனஸ் பின்னணி இசை தொய்வான திரைக்கதை