Sunday, May 19
Shadow

கார்பன் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

போனால் போலீஸ் வேலைக்கு தான் போவேன் என்று அடம்பிடிக்கும் மகன், அவரை வெறுக்கும் அப்பா என கார்பன் படத்தின் கதை ஆரம்பமாகிறது. மகனாக வித்தார்த்தும், அப்பாவாக மரிமுத்துவும் நடித்துள்ளனர். இந்நிலையில் வித்தார்த்திற்கு கனவில் வருவதெல்லாம் நிஜத்தில் நடக்கின்றது.

எனவே கனவில் வித்தார்தின் தந்தையான மாரிமுத்துவிற்கு விபத்து நடப்பதுபோல் தோன்றியது. பதறிஅடித்துக்கொண்டு வித்தார்த் தன் அப்பாவை காப்பாற்ற போகும் வேளையில் அவருக்கு உண்மையிலேயே அந்த விபத்து நடந்துவிட்டது.

இது விபத்தல்ல கொலைமுயற்சி என வித்தார்த்திற்கு தெரியவர இந்த கொலைமுயற்சி ஏன் நடந்தது, தன் அப்பாவை கொலைசெய்ய முயற்சிக்கும் அந்த நபர் யார் என்று தேடிச்செல்கிறார். இறுதியில் இப்பதிலுக்கான விடையை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் கார்பன் படத்தின் மீதி கதை.

வித்தார்த்தின் 25 வது திரைப்படமான இது அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும். நாயகியாக தான்யா நடித்துள்ள இப்படத்திற்கு சாம் CS இசையமைத்திருக்கிறார்.புதுமுக இயக்குனரான ஆர்.ஸ்ரீனிவாசன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் கதையையும் திரைக்கதையையும் பார்க்கும்போது இது இவருக்கு முதல் படம்தானா என்ற சந்தேகம் வருகிறது. அந்த அளவிற்கு படத்தின் திரைக்கதை சிறப்பாக அமைத்திருக்கிறார்.மேலும் இப்படத்தில் நடித்த அனைவரும் தங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.