
சார்லஸ் எண்டர்பிரைசஸ் திரைவிமர்சனம்

சார்லஸ் என்டர்பிரைசஸ் ஒரு மலையாள கூட்டணிகள் உருவாகிய படம் மிகவும் எதிர்பார்ப்புடன் திரையரங்க குழு சென்றோம் நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்று பார்ப்போம்
சார்லஸ் என்டர்பிரைசஸ் என்று கேட்டவுடன் நமக்கு தோன்றுவது இது ஏதோ ஒரு மளிகை கடை பெயர் இல்லை ஒரு பலசரக்கு கடை பெயர் என்று தான் தோன்றும் அதன் அடிப்படையில் தான் இந்த படமும் அமைந்திருக்கும் என்றும் நாம் நினைக்கத் தோன்றும் ஆனால் இது முற்றிலும் வித்தியாசமான ஒரு கதைக்களம் என்று தான் சொல்லவேண்டும் .
ஜாய் மூவி என்டர்பிரைசஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள் இந்த படத்தில் ஊர்வசி கலையரசன் ராஜு வர்கீஸ் குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடிப்பில் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் சார்லஸ் எண்டர்பிரைசஸ்

எல்கேஜி குடியிருப்பில் வசிக்கும் ஊர்வசி அவருடைய கணவர் குருசாமி அவர்களுக்கு ஒரு மகன் ரவி இவருக்கு மாலைக்கண் நோய் மாலை 6 மணி மேல் இவருக்கு கண் தெரியாது இவர் ஒரு காபி ஷாப்பில் வேலை செய்கிறார் . இவருக்கு இவருடைய கண் சரி செய்ய வேண்டும் அதோடு இவருக்கும் ஒரு தனி காபி ஷாப் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பணத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் அந்த விநாயகர் சிலைக்கு பல லட்சங்கள் கொடுக்கிறேன் அந்த அந்த விநாயகர் சிலையை கொடுக்கும் படி கேட்கிறார்கள். ஆனால் அந்த சிலையோ அவர்கள் குடும்பத்தின் பாரம்பரிய சிலை அது மட்டுமல்லாமல் பல நூற்றாண்டுகளுக்கான ஒரு பாரம்பரியமிக்க இந்த சிலை ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் கண்காணித்தோரும் ஒரு புராதான சிலை இருந்தும் தன் பணத்தேவையை நினைத்து ரவி இந்த சிலையை விற்க முயற்சிக்கிறார் அதற்கு அவருக்கு கலையரசன் உதவி செய்கிறார் இந்த சிலையை விட்டார்களா எப்படி விட்டார்கள் இவர் கடை ஆரம்பித்தாரா என்பது தான் மீதிக்கதை
இயக்குனர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இவருக்கு முதல் படம் முதல் முயற்சி பாராட்டக் கூடிய ஒரு முயற்சி என்று தான் சொல்ல வேண்டும் பழைய கதைக்களம் என்றாலும் திரைக்கதையில் பல புதுமைகள் செய்திருக்கிறார் குறிப்பாக எல்கேஜி காலனி அந்த காலனியில் வசிக்கும் மக்கள் அவர்களின் வாழ்க்கை முறை அந்த காலனிக்கு வரும் திருடர்கள் அந்த திருடர்களை பிடிக்க அந்த காலனியில் இருக்கும் மூவர் இந்த காட்சிகள் எல்லாம் நம்ம கலகலப்பாக்கி இருக்கிறது இருந்தும் திரைக்கதை கொஞ்சம் வளவளவென்று இருப்பதால் படத்தில் தொய்வு ஏற்படுகிறது. நல்ல நட்சத்திர பட்டாளம் இருந்தும் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கும் இருந்தாலும் படம் ரசிக்கும் படி தான் உள்ளது.

படத்தின் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் ஊர்வசி கடவுள் பக்தி அதிகம் இருந்த ஒரு பெண்ணாக நடித்திருக்கிறார் இயக்குனரின் எண்ணத்தை மிக அற்புதமாக பூர்த்தி செய்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
மகனாக நடித்திருக்கும் ரவி என்கின்ற ராஜு வர்கிஸ் தமிழில் இவருக்கு இது முதல் படம் ஆனால் மலையாளத்தில் பளபளங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ராஜு வர்கீஸ் மிக அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் இரவு நேரங்களில் கண் தெரியாத வரும் அதே போல பெண் பார்க்கும் போது அந்த பெண்ணிடம் வலியும் காட்சிகளிலும் சரி கலையரசனுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளும் மிக அற்புதமாக செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
கலையரசன் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அதற்கு ஒரு சாட்சி தான் இந்த படம் என்று கூட சொல்லலாம் இந்த படத்தில் அவர் ஒரு தமிழராகவே நடித்திருக்கிறார் தனக்கு கொடுத்த பங்கை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் நாயகன் இல்லாமல் இருந்தாலும் நாயகனுக்கும் இயக்குனருக்கும் பலம் சேர்த்து இருக்கிறார்.
குரு சோமசுந்தரம் ஊர்வசியின் கணவராக வருகிறார். படத்தில் இவருக்கு பெரிய காட்சி இல்லாவிட்டாலும் தனக்கு கொடுத்ததை சிறப்பாக செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் ஒரு நல்ல நடிகரை இன்னும் பயன்படுத்திருக்கலாம் என்று தோன்ற வைக்கிறது.
மொத்தத்தில் சார்லஸ் என்டர்பிரைசஸ் கடைக்கு ஒருமுறை சென்று வரலாம்.
