
வள்ளுவர் கோட்டத்தில் சினிமா–ஆன்மிகம்–பிரம்மாண்டம்:
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ‘99/66 – தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, வழக்கமான பட விழாவை விட முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக அமைந்தது. ஒரே மேடையில் இசை வெளியீடு, டிரெய்லர் வெளியீடு மட்டுமின்றி, அடுத்த படத்தின் அறிவிப்பும் சேர்ந்து நடந்ததால், விழா முழுக்க உற்சாகம் நிரம்பி இருந்தது.
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், எம்.எஸ். மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து, தயாரித்து, இயக்கியுள்ள இந்த படம், ஆன்மிகம் – சமூக சிந்தனை – த்ரில்லர் கலந்த வித்தியாசமான முயற்சியாக பேசப்படுகிறது.நட்சத்திர பட்டாளம்
சபரி, ரோகித் கதாநாயகர்களாகவும், ரக்ஷிதா மகாலட்சுமி, ஸ்வேதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். கே.ஆர். விஜயா, சிங்கம் புலி, சாம்ஸ், அம்பானி சங்கர், புஜ்ஜிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ். மூர்த்தி, படத்தில் ஒரு முக்கிய வேடத்திலும் தோன்றுகிறார்.
“இது சாதாரண பேய்ப்படம் இல்லை” – மேடையில் பேசியவர்கள்
விழாவில் பேசிய கலைப்புலி எஸ். தாணு,
“99/66 ஒரு பிரம்மாண்டமான படைப்பு. வியாபார சிந்தனையுடன் சினிமாவை அணுகும் இயக்குநரால்தான் இப்படியொரு முயற்சி சாத்தியம்”
என்று பாராட்டினார்.
ஆர்.வி. உதயகுமார் பேசும்போது,
“பில்டிங் கட்டும் வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்து கலக்குகிறார் மூர்த்தி. ரக்ஷிதாவின் தீவிர ரசிகன் நான்”
என்று நகைச்சுவையுடன் பாராட்டினார்.
பேரரசு பேசும்போது அரங்கமே சிரிப்பில் மூழ்கியது.
“உதயகுமார் இயக்குநர் சங்க தலைவரா? இல்ல ரக்ஷிதா ரசிகர் மன்ற தலைவரா?”
என்று கேட்டு,
“பேய்ப்படம் என நினைத்தால், பாடல்கள் எல்லாம் பக்தி படத்துக்கு சமமாக இருக்கிறது. பிள்ளையார், கருப்பண்ண சாமி, புத்தர் – மூன்றும் ஒரே படத்தில்!”
என்று படத்தின் தனித்துவத்தை சுட்டிக்காட்டினார்.
புத்தர் குறித்த அம்சம் முக்கிய பேசுபொருள்

நடிகை ரக்ஷிதா பேசும்போது,
“புத்தர் பற்றி இப்படத்தில் சொல்லியிருக்கும் விஷயம் கண்டிப்பாக பெரிய அளவில் பேசப்படும்”
என்று கூறியது, விழாவின் முக்கிய ஹைலைட்டாக அமைந்தது.
உண்மையிலேயே, அரசு அனுமதியுடன் தாய்லாந்து, பர்மா, இலங்கை போன்ற நாடுகளில், 500 புத்த பிக்குகளின் மத்தியில் காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்பட்டிருப்பது படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தொழில்நுட்ப பலம்
AI–CG காட்சிகள், பிரம்மாண்ட ஒளிப்பதிவு, வலுவான சண்டைக் காட்சிகள் என தொழில்நுட்ப ரீதியாகவும் படம் வித்தியாசமான முயற்சியாக உருவாகியுள்ளது.
ஒளிப்பதிவு – சேவிலோ ராஜா
படத்தொகுப்பு – மீனாட்சி சுந்தரம்
சண்டை – பயர் கார்த்திக்
கூடுதல் சர்ப்ரைஸ்
இவ்விழாவில், மித்ரா பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பான ‘ஹஸ்கி ஹவுஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரும் வெளியிடப்பட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
முடிவில்…
‘99/66 – தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு’
பேய்க் கதையா? ஆன்மிகப் படமா? சமூக சிந்தனையா?
என்ற கேள்விகளை எழுப்பும், தமிழ் சினிமாவில் அரிதாகக் காணப்படும் முயற்சியாக உருவாகி வருவதாகவே இந்த விழா உணர்த்தியது.
படம் திரைக்கு வரும் போது, பேசுபொருளாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை

Cinema, Spirituality and Grandeur at Valluvar Kottam:
‘99/66 – Thonnootru Onbadhu Arupathiyaaru’ Audio & Trailer Launch Celebrated Grandly
The audio and trailer launch of the film ‘99/66 – Thonnootru Onbadhu Arupathiyaaru’, held at Chennai’s Valluvar Kottam, turned out to be a grand event that stood apart from routine film functions. What made the occasion special was that three major announcements were made on a single stage — the audio launch, trailer launch, and the unveiling of the next production — creating continuous excitement throughout the evening.
Produced by Mithra Pictures Private Limited, the film is written, scripted, dialogued, lyrically composed, musically scored, produced, and directed by M.S. Murthy. The movie blends spirituality, social thought, and thriller elements, making it a unique cinematic attempt.
Star Cast
The film stars Sabari and Rohith as the lead actors, with Rakshitha Mahalakshmi and Swetha playing the female leads.
Veteran and popular actors including K.R. Vijaya, Singam Puli, Sams, Ambani Shankar, Bujji Babu, and several others appear in key roles. Producer-director M.S. Murthy himself plays an important character in the film.
“This Is Not a Regular Horror Film” – Voices from the Stage
Veteran producer Kalaipuli S. Thanu, while speaking at the event, said:
“99/66 is a grand cinematic work. Only a director with strong business acumen can deliver such a large-scale project.”
Director R.V. Udayakumar, in a lighter vein, remarked:
“Murthy has left construction work and entered cinema to make a mark. I am a huge fan of Rakshitha.”
Director Perarasu brought humor and insight to the stage, drawing loud applause:
“Is Udayakumar the President of the Directors’ Association or the President of Rakshitha’s Fan Club?” He added, “You think it’s a horror film, but the songs feel like a devotional movie — songs on Lord Ganesha, Karuppanna Sami, and Buddha, all in one film!”
Buddha-Related Theme Becomes a Talking Point
Actress Rakshitha, while addressing the audience, stated:
“What the film says about Buddha will definitely become a widely discussed topic.”
This statement drew special attention, especially since the film was shot with official government permission in Thailand, Myanmar, and Sri Lanka, including scenes and songs filmed inside Buddhist monasteries among nearly 500 Buddhist monks — a rare and ambitious effort in Tamil cinema.

Technical Strength
The film also stands out technically, with large-scale AI-CG visuals, grand cinematography, and high-energy action sequences.
Cinematography: Sevilo Raja
Editing: Meenakshi Sundaram
Action Choreography: Fire Karthik
A Bonus Surprise
As an added highlight, the event also witnessed the release of the first look and teaser of Mithra Pictures’ second production, ‘Husky House’, which pleasantly surprised the audience.
In Conclusion
Is ‘99/66 – Thonnootru Onbadhu Arupathiyaaru’ a horror film?
A spiritual narrative?
A social commentary?
The launch event clearly conveyed that this film is a rare and unconventional attempt in Tamil cinema — one that is expected to spark conversations once it hits the big screen.
All signs point to 99/66 becoming a much-discussed film upon release.
