Tuesday, July 23
Shadow

நகைசுவை நடிகர் சாம்ஸ் மகன் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்குகிறார்


தமிழ் cஇனிமாவில காமெடி நடிகர்கள் பட்டியல் என்பது மிக பெரியது அதில் குறிபிட்ட நடிகர்கள் தான் முன்னிலை வகித்து வருகிறார்கள் அந்த வரிசையில் முக்கிய இடத்தில் இருப்பவர் சாம்ஸ் என்று சொன்னால் மிகையாகது. நாடக குழுவில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். இதனால் என்னவோ இவரின் நகைசுவை ரசிகர்களால் கவரபட்டது. இதன் மூலம் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார் சினிமாவில் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் மேல் திரைத்துறையில் வெற்றிகரமாக வளம் வரும் ஒரு நடிகர் . சாம்ஸ் தற்போது இவர் மகன் யோஹன் தமிழ் சினிமாவில் நடிகராக களம் இறங்குகிறார்.

கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும் , BOFTA’வில் இயக்குனர் பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்துவிட்டார்.

தற்பொழுது இயக்குனர் திரு ராம் அவர்களிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றி வரும் யோஹன் நடிகனாக களமிறங்க தயாராகிவிட்டார்.

அவருக்கு உங்களது ஆசிகளையும் ஆதரவையும் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.