Monday, July 6
Shadow

தர்பார் திரை விமர்சனம் (மாஸ் ) Rank 4/5)

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்த தர்பார் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உலகளவில் 7,000 திரையங்குகளிலும், இந்தியாவில் 4,000-க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும் இன்று ரிலீஸாகியுள்ளது.

மூன்று முகம், பாண்டியன், ஜெரப்டார், ராம் ராபர்ட் ரஹீம், அன்புக்கு நான் அடிமை, கொடி பறக்குது, தோஸ்தி துஷ்மணி, ஃபல் பேன் அங்கரே, நாட்டுக்கு ஒரு நல்லவன் ஆகிய படங்களை தொடர்ந்து ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

பிகில் படத்திற்கு பிறகு நடிகை நயந்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதிக் பாபர், ந்வாப் ஷா மற்றும் ஜடின் சர்னா ஆகியோர் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளனர்.

தர்பார் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. படத்தில் ரஜினியின் நடிப்பு வியக்க வைக்கும் வகையில் படு படு சுறுசுறுப்பாக நடித்துள்ளதை காண முடிகிறது அனிருத்தின் இசை, படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் இருப்பதுடன், எந்த படங்களிலும் இதுவரை இடம்பெறாத பிஜிஎம் படத்திற்கான ஸ்கோரை மேலும் அதிகரித்துள்ளது.

சண்டை காட்சிகள், காதல் காட்சி என அனைத்திலும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு அருமையாக வெளிபட்டுள்ளது. . செமயான திரைக்கதை கொண்ட படமாக இருப்பதால் சிறந்த கம்ர்ஷியல் படமாக உள்ளது.

படத்தின் மைனஸ் – ஹீரோயினுக்கு வேலை இல்லாதது படத்தின் ஒரே மைனஸ்.

மொத்தத்தில், சிவாஜிக்கு பிறகு ரஜினிகாந்துக்கு சிறந்த கமர்ஷியல் படமாக இருப்பதால், ரசிகர்களை முழுமையாக திருப்திபடுத்தும். மொத்தில் முருகதாஸ் இஸ் பேக் என்றே சொல்ல வேண்டும்