Saturday, June 3
Shadow

டிக்கிலோனா’ புகழ் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ’வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது*

பீப்பிள் மீடியா ஃபேக்டரி, தயாரிப்பாளர் T.G விஸ்வபிரசாத் வழங்கும்
’டிக்கிலோனா’ புகழ் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ’வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது*

பீப்பிள் மீடியா ஃபேக்டரி ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் 63 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி படத்தை முடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

‘வடக்குபட்டி ராமசாமி’ திரைப்படம் குறித்தான அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நடிகர் சந்தானம்-இயக்குநர் கார்த்திக் யோகியின் முந்தைய ‘டிக்கிலோனா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியும் இதற்கு முக்கியக் காரணம். இப்படம் அதன் எண்டர்டெயின்மெண்ட் விஷயங்களுக்காக பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றது. இப்போது, இந்தக் கூட்டணி மற்றொரு வசீகரிக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த, அனைத்து விதமான பார்வையாளர்களுக்கும் பிடித்த வகையிலான அடுத்தக் கதையுடன் வந்திருக்கிறார்கள். தற்போது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக 63 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி புதிய சாதனையை தீவிர முயற்சியுடன் படக்குழு சாத்தியப்படுத்தியுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

சந்தானம் மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கும் இப்படத்தில் நடிகர் தமிழ் வில்லனாக நடிக்கிறார். ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேசு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், சிவ நந்தீஸ்வரன் படத்தொகுப்பாளராகவும், ராஜேஷ் கலை இயக்குநராகவும், திரு.வி.ஸ்ரீ.நட்ராஜ் கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஷெரீப் நடன இயக்குநராகவும் உள்ளனர். ’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தை T.G விஸ்வபிரசாத் தயாரிக்க விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்துள்ளார்.

*People Media Factory Producer T.G Vishwaprasad Presents*
*‘Dikkiloona fame filmmaker Karthik Yogi directorial*
*Santhanam starrer Vadakupatti Ramasamy wrapped up its shooting.

People Media Factory has created a new personal record of shooting continuously for 63 days without a single day break and completed the film.

 

The film ‘Vadakupatti Ramasamy’ has kept the spotlights gleaming upon the project from the day of the announcement. Courtesy of the blockbuster success of actor Santhanam- director Karthik Yogi’s previous outing ‘Dikkiloona’: The film won the hearts and praises of audiences for its entertainment. And now, the duo arrives in style with yet another captivating entertainer, which will cater to the tastes of universal crowds. The makers are happy to announce they have completed the film’s shooting now. The intriguing fact is the team’s vigorous efforts of creating a new record by shooting 63 days continuously without a single-day break. The postproduction work is briskly proceeding, and the official word on the film’s audio, trailer, and worldwide theatrical release will be made soon.

Santhanam and Megha Akash play the lead roles in this movie, and actor Tamizh appears as the antagonist. The others in the star cast include John Vijay, MS Bhaskar, Ravi Mariya, Maaran, Motta Rajendran, Nizhalgal Ravi, Seshu, It is Prashanth, Jacqueline, and many others.

Sean Roldan’s musical score and Deepak’s cinematography are going to be the additional embellishments to this movie that features Shiva Nandeeswaran as the editor, Rajesh as the art director, Mr. V. Shree Natraj as the creative producer and Sheriff as the choreographer.

Vadakupatti Ramasamy is produced by T.G Vishwaprasad and is co-produced by Vivek Kuchibhotla.