Monday, May 20
Shadow

முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடிக்கும் தனுஷின் “வாத்தி”

தனுஷ்,சம்யுக்தா மேனன், சமுத்திரகனி, பாரதிராஜா  நடிக்கும் வாத்தி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது இதை தொடர்ந்து படத்தின் இயக்குனர் வெங்கி அட்டுறியுடன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

வாத்தி 90ல் நடக்கும் கதை களம் அதுவும் அன்றைய காலகட்டத்தில் நடந்த கல்வி மாற்றத்தை மையமாக தான் இந்த படம் உருவாகியுள்ளது.
இயக்குனர் படத்தை பற்றி சொல்லும் போது நான் ஏற்கனவே மூன்று தெலுங்கு படம் இயக்கி இருக்கேன் அந்த மூன்றும் காதல் கதை அதில் இருந்து மாறுபட்ட கதை களம் போக வேண்டும் என்று நினைத்து தான் நான் படிக்கும் போது நான் சந்தித்த சில விஷயங்களை வைத்து இந்த கதையை உருவாக்கினேன்.

பணம் தான் படிப்பை முடிவு செய்தது காரணம் கல்வி வர்த்தகம் ஆனது தனியார் பள்ளிகள் அதிகம் ஆனது அரசு பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் இல்லாமல் போனது கல்வி இலவசமாக கிடைக்கும் ஆனால் கல்வி வியாபாரமாக ஆனது இதை தான் கருவாக வைத்து இந்த படத்தின் கதையமைப்பு அமைந்துள்ளது என்று இயக்குனர் கூறினார்.

இது படத்தில் தனுஷ் கணக்கு வாத்தியாரக நடிக்கிறார். எனக்கு இந்த படத்தின் படப்பிடிப்பில் மிக அதிகமாக உதவினார். வசனம் தமிழ் சினிமாவுக்கு எப்படி இருக்கணும் என்று பல இடங்களில் எங்களுக்கு திருத்தி கொடுத்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பல விஷயங்களில் எனக்கு உறுதுணையாக இருந்தார். அதோடு இந்த படத்தில் தனுஷ் இரண்டு பாடல்களையும் எழுதியுள்ளார். அவரிடம் இருந்து நான் பல விஷயங்களை கற்று கொண்டேன். நான் இயக்கிய படங்களிலலே எனக்கு மிக முக்கிய படமாக கருதுகிரேன் இந்த படம் தமிழுக்கும் தெலுங்குக்கு நிறைய மாற்றங்கள் உள்ளது. படத்தின் நீளம் கூட தமிழைவிட தெலுங்கில் அதிகம் என்று கூறினார்.

இதுவரை கல்விக்கா நடுநிலையாவும் உயர்ந்த கல்வி கொடுக்க வேண்டும் என்று நடித்த சமுத்திரகனி இந்த படத்தில் எதிர் முறையாக நடித்துள்ளார். இந்த கதபார்திரம் சொன்னதும் சமுத்திரகனி அய்யோ நான் முடியாது என்று கூறினார்.கதையை கேட்டதும் உடனே நடிக்க சம்மதித்தார்.இந்த கதைக்கு இவர் மிக பெரிய பலம்.

இதோடு இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் நடித்துள்ளார். இவர் இயக்கிய வேதம் புதிது படம் எனக்கு மிக பெரிய இன்ஸ்பிரேஷன் குறிப்பாக பாலு என்பது உங்க பேர் தேவர் என்பது நீங்க வாங்கிய பட்டமா என்று கேட்கும் இடம் என்னை மிகவும் பாதித்தது அவரை இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க வைத்தது மிக பெரிய பெருமையாக நினைக்கிறேன்