
“பைசன்” படத்தின் நிஜ நாயகன் மனத்தி கணேசனின் உடற்கல்வி ஆசிரியர் தங்கராஜை சந்தித்து நன்றி தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ்
சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் “பைசன்” திரைப்படம், பார்வையாளர்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், தென் தமிழக மக்களின் வாழ்வியலையும், கபடி விளையாட்டின் பெருமையையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நிஜ வாழ்க்கை கபடி வீரர் மனத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்து இந்தப் படத்துக்கான ஈர்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.
படத்தில் துருவ் முக்கிய கதாபாத்திரமாக கபடி வீரராக நடித்திருக்கிறார். அவருக்கு ஊக்கமும் ஆதரவாக நிற்கும் உடற்பயிற்சி ஆசிரியர் வேடத்தில் நடிகர் மதன் சிறப்பாக நடித்துள்ளார்.

நிஜ வாழ்க்கையில் மனத்தி கணேசனின் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தவர் மெஞ்சனாபுரம் பகுதியைச் சேர்ந்த திரு. தங்கராஜ் அவர்கள். மனத்தி கணேசனின் விளையாட்டு வாழ்க்கை வளர்ச்சிக்காக முக்கிய பங்கு வகித்த அவரை, இயக்குனர் மாரி செல்வராஜ் இன்று நேரில் சந்தித்து, தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
படம் வெற்றி பெற்றதை முன்னிட்டு நடைபெற்ற இந்த சந்திப்பில், தங்கராஜ் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வழிகாட்டுதலுக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் மனமார்ந்த நன்றியை தெரிவித்ததோடு, அவரது சேவையைப் பாராட்டியும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு, “பைசன்” படத்தின் வெற்றியைக் கொண்டாடும் சிறப்பான தருணமாக அமைந்தது
