
தமிழ் சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன்!
கருப்பு–வெள்ளை திரைப்படங்களிலிருந்து கலர் சினிமா, டிஜிட்டல் சினிமா என பல கட்டங்களை கடந்து வந்துள்ள தமிழ் திரைப்பட உலகம், இப்போது ஏ.ஐ. சினிமா எனும் புதிய யுகத்தை நோக்கி நகர்கிறது. அந்த மாற்றத்துக்கு முக்கியமான அடியெடுத்து வைத்துள்ளார் இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன். அவர் இயக்கிய “அகண்டன்” திரைப்படம், தமிழ் சினிமாவுக்கு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது.
செழியன் இயக்கத்தில் வெளியான “டூலெட்” திரைப்படத்தின் நாயகனாக அறிமுகமானவர் சந்தோஷ் நம்பிராஜன். உலக நாடுகளில் பல்வேறு விருதுகளைப் பெற்ற அந்த திரைப்படத்துக்குப் பிறகு, அவர் நடித்த “வட்டார வழக்கு”, “உழைப்பாளர் தினம்” போன்ற படங்கள் விமர்சகர்களிடமிருந்து சிறப்பான பாராட்டைப் பெற்றன.
அதனைத் தொடர்ந்து, அவர் நடித்த “ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன்” திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகி, பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல், இணையத்தில் வெளியாகிய “காதலிசம்” திரைப்படம், “லிவிங் டுகெதர் vs திருமணம் – எது சிறந்தது?” என்ற சமூகச் சிந்தனையை நவீன காதல் கோணத்தில் ஆராய்ந்து, பார்வையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
இப்போது, சந்தோஷ் நம்பிராஜன் தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக, முழுக்க முழுக்க iPhone 11 Pro Max மூலம் எடுத்துள்ள “அகண்டன்” திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். பொதுவாக செல்போனில் எடுக்கப்படும் படங்கள் குறுகிய பரப்பளவில் மட்டுமே அமையும் என்ற நம்பிக்கையை உடைத்து, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா என மூன்று நாடுகளில் iPhone மூலம் இந்த படத்தைப் படமாக்கி புதிய சாதனையை நிறுவியுள்ளார்.
இது தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய வாசலைத் திறக்கும் முயற்சி எனலாம். இனி செல்போனில் படம் பார்க்க மட்டும் அல்லாமல், படம் எடுத்து வெளியிடும் காலமும் தொடங்கியிருக்கிறது. “அகண்டன்” திரைப்படம் அகண்ட திரையரங்குகளில் வெளியாக இருப்பது, தமிழ் திரைப்பட உலகிற்கான பெரும் முன்னேற்றமாகும்.
புதிய முயற்சிக்காக ஊக்கமும் ஆதரவும் அளித்து வரவேற்ற பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடக நண்பர்களுக்கு சந்தோஷ் நம்பிராஜன் நன்றியை தெரிவித்திருக்கிறார்.
தயாரிப்பு: நம்பிராஜன் இன்டர்நேஷனல் சினிமாஸ் சார்பில்
தயாரிப்பாளர்கள்: சந்தோஷ் நம்பிராஜன் & பிரேம்சந்த் நம்பிராஜன்
இணை தயாரிப்பு: சிங்கப்பூரைச் சேர்ந்த Singawood நிறுவனம்
நடிப்பு: சந்தோஷ் நம்பிராஜன், ஹரினி, சிங்கப்பூர் நடிகர் யாமீன் உள்ளிட்டோர்
இசை: ஏ.கே. பிராங்ளின்
எடிட்டிங்: கோட்டிஸ்வரன்
கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம்: சந்தோஷ் நம்பிராஜன்
நான்கு அதிரடி காட்சிகளுடன் சிறப்பாக உருவாகியுள்ள “அகண்டன்”, தமிழ் சினிமாவின் தொழில்நுட்பப் பயணத்தில் மறக்க முடியாத மைல் கல்லாக அமையப்போகிறது.