
டிராகன் – திரைவிமர்சனம்
பிரதீப் ரங்கநாதன் படங்கள் என்றாலே நமக்கு நிச்சயம் அது நமக்கு ட்ரீட் தானென்று நாம் அறிந்த விஷயம் இது இவரது இயக்கத்தில் மட்டும் இல்லை இவரின் நடிப்பிலும் ட்ரீட் தான் என்று சொல்ல வருகிறார் டிராகன் படம் மூலம் இது ட்ரீட்டா இல்லை வெறுக்க வைக்கிறதா என்று பார்ப்போம்.
பிரதீப் ரங்கநாதன் அணு பாமா பரமசிவன், கையாடு லோஹர், வி.ஜெ.சித்து ஹர்ஷத் கான் கே.எஸ்.ரவிக்குமார்,மிஷ்கின்,கௌதம் வாசு தேவ்மேனன் மரியம் ஜார்ஜ் இந்துமதி மற்றும் பலர் நடிப்பில் லியோன் ஜேம்ஸ் இசையில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் டிராகன்
பிரதீப் பிளஸ் 2 வில் 96 சதவீதம் மார்க் எடுத்து பாஸ் ஆகிறார். பள்ளியில் படிக்கும் போதே அதே பள்ளியில் படிக்கும் சக மாணவியை ஒரு தல பட்சமாக காதலிக்கிறார். அந்த காதலை வெளி படுத்த அந்த பெண்ணிடம் போக அந்த பெண் நீ எனக்கு செட் ஆகமாட்டா என்று சொல்ல இவர் ஏன் என்றுகேட்க நீ பழம் மாதிரி இருக்க எனக்கு கெத்தா இருக்குற பயனை தான் பிடிக்கும் என்று அந்த பெண் சொல்ல வி.ஜெ சித்துவிடம் நடந்தது சொல்ல இனி நாமும் கல்லூரியில் கெத்தா இருப்போம் என்று சொல்ல அதை கேட்ட பிரதீப் படிப்பின் மேல் இருந்த நாட்டத்தை விட்டு கெத்து காட்டுகிறார் இந்த கேட்டதை பார்த்த அணு பாமா இவரை காதலிக்க்க அனால் முதல் மாணவனாக இருந்த பிரதீப் கல்லூரியில் ஒரு ரௌடியாக வளம் வருகிறார்.கடைசியில் கல்லூரி முடிக்கும் போது நான்கு வருட கல்லூரி பாடத்திலும் பெயில் ஆகி 48 ஹாரியஸ் வைக்கிறார். இதனால் காதலி அணு பாமாவும் இவரை விட்டு போகிறார்.இத்தனைநாள் மனம் உடைந்த பிரதீப் வாழ்க்கையில் முன்னரே வேண்டும் என்று முயற்சிக்க குறுக்கு வழியில் முன்னேறுகிறார். இது ஒரு கட்டத்தில் ஆபத்தில் முடிகிறது இந்த ஆபத்தில் இருந்து எப்படி தப்பித்தார் என்பதை இயக்குனர் அஸ்வத் மிக அழகாக அழுத்தமாக உணர்ச்சி பூர்வமாக கூறியிருக்கிறார்.
பிரதீப் ரங்கநாதன் மீண்டும் தனது வெற்றியை பதித்து இருக்கிறார்.என்று தான் சொல்லணும். ஹாட்ரிக் வெற்றியை பறித்து இருக்கிறார். நடிப்பில் முழு தேர்ச்சி என்று தான் சொல்லணும் இயக்குனர் எண்ணம் அறிந்து காட்சிகளின் தன்மை அறிந்து மிக நேர்த்தியாக நடித்து இருக்கிறார். சண்டை காட்சிகளிலும் சரி காதல் காட்சிகளும் நிறைவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். தான் சிறந்த இயக்குனர் மட்டும் இல்லை சிறந்த நடிகரும் என்று மிக அற்புதமாக நிரூபித்து இருக்கிறார்.
அணு பாமா பரமசிவன் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவில் அவருக்கு நேர்த்தியான கதாபாத்திரம் அதை மிக நிறைவாக நடித்து இருக்கிறார். காதலில் இளமையுடனுடனத்தோடு காதல் தோல்வியில் காட்சிகளிலும் சரி மிக அற்புதமாக நடித்து இருக்கிறார்.
கையாடு லோஹர் இரண்டாவது காதலியாக வரும் இவர் அழகுக்கு அழகு நடிப்புக்கு நடிப்பு கவர்ச்சிக்கு கவர்ச்சி என்று அனைத்திலும் நம்மை கவருகிறார்.
படத்துக்கு மிக பெரிய பலம் என்றால் அது இயக்குனர் மிஷ்கின் கல்லூரி பேராசிரியராக வரும் அவர் படத்தின் கதையை மிக நேர்த்தியாக நகர்த்தி செல்கிறார். உண்மையான ஒரு பேராசிரியராக போலவே நம்மை நினைக்க வைக்கிறார் . தனது அற்புதமான நடிப்பின் மூலம் படத்தை நகர்த்துகிறார்.
பிரதீப் அப்பாவாக வரும் மரியம் நடிப்பில் நெஞ்சை வருடுகிறார். இப்படி ஒரு அப்பா நமக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற வகையில் நடித்து இருக்கிறார்.படத்தில் நடித்த மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மிக உண்மையான உழைப்பை கொடுத்து இருக்கிறார்கள்.
சித்து மற்றும் ஹர்ஷத் கான் இவர்கள் நகைசுவை விருந்து என்று தான் சொல்லணும்.
படத்தின் மேலும் பலம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் பாடல்களும் சரி பின்னணி இசையும் அருமை
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தனது இரண்டாவது வெற்றியை நிச்சயம் சுவைப்பார். நேர்த்தியான கதை அற்புதமான திரைக்கதை காட்சிக்கு காட்சி நம்மை ரசிக்க வைக்கிறார்.அதோடு மிகவும் உணர்வுபூர்வமான கதையை கொடுத்து இருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு தலை சிறந்த இயக்குனர் என்று பேர் எடுக்கிறார்.
மொத்தத்தில் டிராகன் ரசிகன்