Sunday, March 16
Shadow

நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் – திரைவிமர்சனம் (யூத் ட்ரீட் ) Rank 3.5/5

நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் – திரைவிமர்சனம் 

இயக்குனர் தனுஷ் தான் இந்திய சினிமாவில்  ஒரு சிறந்த நடிகர்  என்று நிரூபித்தவர். அதே போல இவரின் இயக்கத்தில் இதற்கு முன் வந்த படங்களும் இவர் ஒரு சிறந்த இயக்குனர் என்று நிரூபித்து இருக்கிறார். இவரின் மூன்றாவது படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்

வழக்கமான காதல் கதை துணை தலைப்பில் 2 K காதல் கதை என்று   சொன்னாலும் சில வழக்கமானவிசயங்களும் சில  கூடுதல்விசயங்களும் கொண்ட , குறை சொல்ல முடியாத கலகலப்பான காதல் கதை தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்

இந்த படத்தில் அறிமுக நாயகன் பவிஷ், அனிகா சுரேந்திரன்,ப்ரியா பிரகாஷ் வாரியார்,மலையாள புகழ் மேத்தியூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராமயா ரங்கநாதன், ராபியா கஹடோன் ஆடுகளம் நரேன் சரத்குமார்,சரண்யா பொன்வண்ணன், மற்றும் பலர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவில் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம்

கதைக்குள் போகலாம் ;

அம்மா அப்பா  வற்புதலின் பெயரில்  தனது பள்ளித் தோழியை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்ளும் தருவாயில் இருக்கும் ஒரு இளம் செஃப் தன் வருங்கால மனைவியிடம் தனுக்கு ஏற்பட்ட காதல் தோல்வி கதை சொல்லுகிறார்.அந்த சமயத்தில் முன்னாள் காதலிக்கு திருமணம் என்று அழைப்பு வர ப்ரியா வாரியார் உனக்குள் அந்த பெண் இன்னும் இருக்கிறாள். அவள் திருமணத்துக்கு சென்று அந்த நினைப்பை விட்டுவிட்டு வா என்று சொல்ல வருங்கால மனைவியில் சொல்லை கேட்டு முன்னாள் காதலி திருமணத்துக்கு கோவா செல்லுகிறார் பவிஷ் அவருடன் உயிர் நண்பன் மேத்தியூ தாமஸ் செல்கிறார். அங்கு என்ன நடந்தது திருமணம் நடந்ததா இல்லை முன்னாள் காதலிக்கும் இவருக்கும் மீண்டும் காதல் வந்தா என்பது தான் கதை

அறிமுக நாயகன் பவிஷ் முற்றிலும் ஒரு இயல்பான நடிப்பில் நம்மை ரசிக்க வைக்கிறார்.சில இடங்களில் தனுஷ் நம்கண்ணுக்கு தெரிகிறார்.காரணம் தனுஷ் சொல்லிக்கொடுத்த விஷயங்களை அப்படியே பிரதிபலித்து இருக்கிறார் பவிஷ்

அனிகா சுரேந்திரன்மிக அற்புதமாக நடித்து இருக்கிறார்.மிக பெரிய பணக்கார பெண் அனால் சாப்பாட்டு ராமி சோறு என்று வந்து விட்டால் எதையும் மறந்துவிடுவார்.  சாப்பாட்டு ராமி கேரக்டர் அவ்வளவு பொருத்தம் . முகத்தைப் பார்த்துக் கொண்டே எழுதினாரோ என்னவோ. அதோடு காதல் காட்சிகளிலும் சரி அப்பாவின் பாச காட்சிகளிலும் மிகவும் நேர்த்தியாக நடித்து இருக்கிறார்.

பாவிஷ் நண்பராக வரும் மேத்தியூ தாமஸ் படத்துக்கு பலம் காட்சிக்குக்காட்சி நம்மை வியக்க வைக்கிறார். இவர்களுடன் நடித்த அனைவரும் தனது கதாபாத்திரம் உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். சரத்குமார் ஆடுகளம் நரேன் சரண்யா பொன்வண்ணன் இவர்கள் கதாபாத்திரம் படத்துக்கு பலம்

கோல்டன் ஸ்போரோவ்  ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் ப்ரியங்கா மோகன் நடன அசைவுகளில் நம்மை கவருகிறார் அதோடு அந்த பாடல் நம்மை ரசிக்கவைக்கிறது

 

படத்தின் பலம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தன் நெருங்கிய நண்பர் தனுஷ் என்பதால் என்ன என்று தெரியவில்லை மிகவும் சிறப்பாக அதாவது மற்ற படங்களை விட இந்த படத்துக்கு மெனக்கெட்டு இருக்கிறார். பாடல்களும் சரி பின்னணி இசையும் படத்துக்கு மிக பெரிய பலம் .

படத்தில் அடுத்த பலம்  லியோன் பிரிட்டோ ஒளிப்பதி அதேபோலா காலை இயக்குனர் பல காட்சிகள் விளம்பர காட்சிகள் போல செதுக்கியுள்ளனர்.

இயக்குனர் தனுஷ் கடந்த இரண்டு படங்களில் இருந்த முற்றிலுமாக மாறி ஒரு கலகலப்பான ஒரு 2k காதல் கதையை மிக அழகாகாதோடு ஆழமான அழுத்தமான காதல் படத்தை கொடுத்து ரசிகர்கள் மனதில் மிக பெரிய இடத்தை பிடிக்கிறார். நிச்சயம் இன்றைய இளைஞர்களுக்கு இந்த படம் மிக பெரிய ட்ரீட் ஆகா கொடுத்து இருக்கிறார். இயக்குனர் தனுஷ் . வளரும் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பது நிச்சயம் பாராட்ட வேண்டும்

மொத்தத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் யூத் ட்ரீட்