Wednesday, May 6
Shadow

அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம்!

அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம்!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் தற்போது துவங்கியுள்ளது.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற அபிஷன் ஜீவிந்த், இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். அவருடன் அனஸ்வரா ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தை “லவ்வர்” மற்றும் “டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்குகிறார். சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட இந்த படம் வேகமாக படப்பிடிப்பை முடித்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இறங்கியுள்ளது.

இன்னும் தலைப்பு அறிவிக்கப்படாத இந்தப் படம், நவீன கால இளைஞர்களை கவரும் காதல் கதையாக உருவாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் மாறுபட்ட கதைக்களங்களில் தொடர்ச்சியான வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், “குட் நைட்”, “லவ்வர்” மற்றும் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றிப் படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”க்கு பிந்தைய ஹாட்ரிக் முயற்சியாக இப்படத்தைத் தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, எடிட்டிங் கே. சுரேஷ் குமார், கலை இயக்கம் ராஜ்கமல், உடை வடிவமைப்பு ப்ரியா ரவி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

டப்பிங் பணிகள் துவங்கியுள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Dubbing Begins for the New Film Starring Abishan Jeevind and Anaswara Rajan!

The dubbing work for the upcoming film produced by Basilian Nazareth and Mahesh Raj Basilian under the banner of MRP Entertainment, and presented jointly by Soundarya Rajinikanth’s Zion Films and MRP Entertainment, has officially begun.

Following his acclaimed performance in Tourist Family, Abishan Jeevind plays the lead role in this new film, with Anaswara Rajan co-starring in an important role.

The film is directed by Madhan, who previously worked as an associate director in Lover and Tourist Family. Announced just a few months ago, the film’s shooting was completed in record time, and post-production work is now in progress.

Yet to be titled, the film is said to be a refreshing modern-age love story that will appeal strongly to today’s youth.

MRP Entertainment, known for delivering unique and successful films like Good Night, Lover, and this year’s blockbuster Tourist Family, is producing this project as its next venture. The film is being jointly presented by Soundarya Rajinikanth on behalf of Zion Films.

Music for the film is composed by Sean Roldan, with cinematography by Shreyas Krishna, editing by K. Suresh Kumar, art direction by Rajkamal, and costume design by Priya Ravi.

With dubbing now underway, the production team is planning to unveil the film’s title and first-look poster very soon.