Tuesday, February 24
Shadow

டிஜிட்டல் உலகிலிருந்து திரை உலகிற்கு: ஹர்ஷவர்தனின் ‘மாயம் நீயடி’ ஒரு புதிய தொடக்கம்

டிஜிட்டல் உலகிலிருந்து திரை உலகிற்கு: ஹர்ஷவர்தனின் ‘மாயம் நீயடி’ ஒரு புதிய தொடக்கம்

சமூக வலைதளங்களில் இசை மூலம் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கிய ஹர்ஷவர்தன், தற்போது நாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகத் தயாராகி வருகிறார். அவரது சமீபத்திய முயற்சியான ‘மாயம் நீயடி’ மியூசிக் வீடியோ ஆல்பம், இதற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

திரைப்படப் பாடல்களுக்கு இணையாக, இன்றைய தலைமுறையினரிடம் சுயாதீன இசை ஆல்பங்களும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக ஜென் Z தலைமுறையின் ரீல்ஸ் கலாச்சாரம், புதிய இசை முயற்சிகளுக்கு வலுவான தளமாக மாறியுள்ளது. இந்த சூழலை சரியாகப் புரிந்துகொண்ட ஹர்ஷவர்தன், இசையமைத்து, பாடி, நடித்து உருவாக்கியுள்ளதே ‘மாயம் நீயடி’.

பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலில், பின்னணி பாடகி சுப்லாஷினியுடன் இணைந்து ஹர்ஷவர்தன் குரல் கொடுத்துள்ளார். மென்மையான காதல் உணர்வுகளை மையமாகக் கொண்ட இந்த பாடல், காட்சியமைப்பிலும் கவனம் பெற்றுள்ளது. நடிகை சஞ்சனா திவாரியுடன் இணைந்து ஹர்ஷவர்தன் வெளிப்படுத்தும் காதல் கெமிஸ்ட்ரி, பாடலுக்கு திரைப்படத் தோற்றத்தை அளிக்கிறது.

ஃபோட்டோகிராபரும் ஓவியரும் இடையே உருவாகும் அறிமுகம் முதல் காதல் வரை பல்வேறு உணர்வுகளை மெல்லிய இசை நயத்துடன் சொல்லும் முயற்சியாக இந்த ஆல்பம் அமைந்துள்ளது. இதன் மூலம், வழக்கமான இன்டிபென்டன்ட் வீடியோவாக அல்லாமல், ஒரு கமர்ஷியல் திரைப்பட மெலோடியைப் போன்ற அனுபவத்தை வழங்குகிறது.

ஏற்கனவே இரண்டு சுயாதீன இசை ஆல்பங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ள ஹர்ஷவர்தன், சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்டவர். அவரது இசைப் பதிவுகள் பெரும் பார்வைகளையும் வரவேற்பையும் பெற்று வருகின்றன.

காதலர் தின வாரத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள ‘மாயம் நீயடி’, அனைத்து முக்கிய இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கிடைக்கிறது. இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த ஆல்பம், ஹர்ஷவர்தனின் திரை பயணத்திற்கான முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.

 

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அவர் அறிமுகமாகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் இசை உலகில் தொடங்கிய இந்த பயணம், வெள்ளித்திரையில் எவ்வாறு தொடரும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

 

From the Digital Stage to the Silver Screen: Harshavardhan’s ‘Maayam Neeyadi’ Marks a New Beginning

Harshavardhan, who has built a strong fan base through his music on social media, is now gearing up to make his debut as a lead actor in Tamil cinema. His latest independent music video album, “Maayam Neeyadi,” is being seen as a significant stepping stone in that direction.

In recent times, independent music albums have been receiving appreciation on par with film songs. With the rise of Gen Z’s reel culture, fresh and creative musical experiments are finding a powerful platform. Understanding this shift, Harshavardhan has composed, sung, and performed in “Maayam Neeyadi,” showcasing his multifaceted talent.

The song, penned by lyricist Vivek, features vocals by Harshavardhan along with playback singer Sublashini. Centered on soft romantic emotions, the track is visually crafted with finesse. Harshavardhan shares screen space with actress Sanjana Tiwari, and their on-screen chemistry gives the video the feel of a melody from a commercial feature film rather than a typical independent release.

The album narrates the journey of acquaintance, friendship, love, longing, and emotional bonding between a photographer and a painter. Each emotion unfolds through soothing music and visually appealing montages, offering both a rich musical and cinematic experience.

Having already released two independent albums, Harshavardhan has attracted considerable attention among music lovers. With lakhs of followers on Instagram and impressive engagement on his musical posts, he has emerged as a favorite among social media audiences.

Released during Valentine’s week, “Maayam Neeyadi” is now available on all major music streaming platforms and has been receiving positive responses not only from music enthusiasts but also from a wider audience.

Meanwhile, Harshavardhan’s debut as a lead actor in Tamil cinema is expected to be officially announced soon. His journey from the digital music space to the big screen is now keenly awaited by fans and industry observers alike.