
மூன்று சைக்ககோக்கள் தனிமையில் வாழும் இளம் பெண்களை கழுத்தைத் துண்டித்து கொலை செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து ஹீரோவின் எப்படி தப்பிக்கிறார் என்பத படத்தின் கதை.
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
மர்ம நபரால் தனிமையில் வாழும் இளம் பெண் ஒருவர் கழுத்து அறுத்து உடலை எரிக்கும் காட்சியில் இருந்து தொடங்குகிறது திரைப்படம்.
தொடக்கத்தில் ஏற்படும் பதட்டமும், அச்சமும் படத்தின் இறுதிகாட்சி வரை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் அஸ்வின் சரவணன்.
தனிமையில் வாழும் இளம் பெண்களை கழுத்தைத் துண்டித்து உடலை எரிக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது. இச்சம்பவத்தை மூன்று சைக்ககோக்கள் செய்கிறார்கள். அவர்களை தீவிரமாக தேடும் பணியில் காவல் துறை ஈடுபடுகிறது. இந்நிலையில் தனக்கு நடந்த ஒரு கசப்பான சம்பவத்தால் குடும்பதைப்பிரிந்து உதவியாளருடன் வசித்து வருகிறார் நடிகை டாப்சி.
இளம் பெண்களை கொடூரமாக கொலை செய்யும் சைக்கோக்கள் அடுத்து டாப்சியை கொள்ள திட்டமிட்டு வருகிறார்கள். அவர்களிடம் இருந்து டாப்சியும் உதவியாளரான அந்த பெண்ணும் தப்பித்தார்களா? இல்லையா என்பதுதான் படத்தின் திரைக்கதை.
புதிய புதிய வீடியோ கேம்களை உறுவாக்கும் கேம் கிரியேட்டராக நடித்திருக்கிறார் டாப்சி. அவருடைய வாழ்கையில் புத்தாண்டு அன்று ஒரு கசப்பான சம்பவம் நடைபெறுகிறது. அந்த சம்பவத்தால் மனதளவில் அவர் பெரிதும் பாதிப்படைக்கிறார். அடுத்த புத்தாண்டு வரும் போது அந்த சம்பவம் அவரை மிகவும் மன உலைசலுக்கு உள்ளாக்குகிறது.
தன்னை சரிசெய்துகொள்ள மருத்துவரின் ஆலேசனை பெறுகிறார். இதற்கிடையில் தன்னுடைய கையில் ஒரு டேட்டூ குத்திக்கொள்கிறார் டாப்சி. அந்த டேட்டூ திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது படத்தின் இன்னொரு ஸ்வாரஸ்யம்.
பாடல்கள் இல்லை, நகைச்சுவை கதாபாத்திரங்கள் இல்லை, ஆனாலும் 1.45 மணிநேரம் ரசிகர்களை சீட்டில் அமர வைக்கும் தந்திரத்தை நேர்த்தியாக கற்று வைத்திருக்கிறார் அஸ்வின் சரவணன்.
படத்தின் பிளஸ் : டாப்சி நடிப்பு, ரோன் ஈதன் யோஹனின் பின்னணி இசையும், வசந்தின் ஒளிப்பதி
படத்தின் மைன்ஸ்: படத்தின் ஒரு புத்தாண்டில் டாப்சிக்கு ஏற்படும் பிரச்னை என்ன என்பதை சொள்ளமேலே விட்டது.
மொத்தத்தில் ஹாலிவுட் படங்களுக்கு இணையான திரில்லர் படமாக இருப்பதால், ரசிகர்களை வெகுவாக கவரும்
தமிழ் சினிமாவின் நிச்சயம் மிக சிறந்த ஒரு படைப்பு என்று மார்தட்டி சொல்லும் படம்
