Wednesday, January 14
Shadow

கொரில்லா – திரை விமர்சனம் (ரசனை) Rank 3.5 /5

 

நடிகர் ஜீவா மற்றும் அர்ஜுன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே இணைப்பில் உருவாக்கியுள படமே கொரில்லா. இந்த படத்தின் கதை மற்றும் இயக்கத்தை டான் சாண்டி செய்துள்ளார்.

இந்த படத்தில் யோகிபாபு, ராதா ரவி, சதீஷ், ராஜேந்திரன் மற்றும் ராமதாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் இசையை சாம் சி எஸ் செய்துள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்

காதல் கதை, காமடி, அறிவியல் போன்றவற்றை சரியான விகித்தில் கலந்து கொடுக்கப்பட்டுள்ள படமே கொரில்லா.

டாக்டராக இருந்து வரும் ஹீரோ (ஜீவா) தலைமையிலான குழுவினர் ஒரு வங்கியை கொள்ளையடிக்கின்றார். ஏன் அவர்கள் வங்கியை கொள்ளையடிகின்றனர் என்பதே படத்தின் முக்கிய கதை

ஜீவா-ஷாலினி காதல் காட்சிகள் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு முக்கிய பக்க பலமே காமடிதான். சாம் சி எஸ்-இன் இடை, ஆபத்தான இடங்களை அழகாக படமாகியுள்ள ஆர்.பி குருதேவ்வின் சினிமாட்டோகிராபி வியக்க வைக்கிறது. இயக்கம் மற்றும் விஎப்எக்ஸ் காட்சிகளை ரசிகர்களை பாராட்டை பெறும்.

இந்த படத்தில் நடித்துள்ள சப்போர்டிங் கேரக்டர்களும் தங்கள் பணியை சிறப்பாகவே செய்துள்ளனர்.

காமடி, ரொமான்ஸ் மற்றும் சஸ்பென்ஸ் காட்சிகள் சரியான அளவில் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதால், இந்த படம் ரசிகர்களை கவரும். இந்த படத்தில் அரசியல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. வங்கி கொள்ளை காட்சிகள் திரிலிங்க்காக எடுக்கப்பட்டுள்ளது. படம் கிளைமேக்ஸ் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் பிளஸ் காமடி,  கதை, ஆர்ட் டைரக்ஷன் மற்றும் விஎப்எக்ஸ்

படத்தின் மைன்ஸ் சில இடங்களில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட காமடி காட்சிகள்

மொத்தத்தில் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய படம். Rank 3.5 /5