
‘டெக்ஸ்லா’ படத்தால் மீண்டும் திரையுலகை ஒன்றிணைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – ஜெய் கூட்டணி!
சென்னையில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் புதிய தமிழ் திரைப்படமான ‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா உற்சாகமாக நடைபெற்றது. கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். நடிகர்கள் ஜெய் மற்றும் சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் ஆனந்தராஜ், ஜி.எம். சுந்தர், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு தீபக் ரவி இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் அதிகாரப்பூர்வ தொடக்க விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீமான், லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி, இயக்குநர் பாலா, இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர்கள் சுஜாதா விஜயகுமார், ஜி.கே.எம் தமிழ் குமரன், அம்மா கிரியேஷன் சிவா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் பல முன்னணி தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் விநியோகஸ்தர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கண்ணன் ரவி, சினிமாவில் தன்னை இன்னும் கற்றுக்கொள்ளும் நிலைமையில் இருப்பதாக கூறியதுடன், திரையுலகினர், ஊடகங்கள், ரசிகர்கள் ஆகியோரின் ஆதரவு இல்லாமல் சினிமா வெற்றி பெற முடியாது என்றார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போன்ற திறமையான இயக்குநருடன் பணியாற்றுவது பெருமையாக இருப்பதாகவும், இந்த திரைப்படம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, ஒரு நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம் என்று கூறி ‘டெக்ஸ்லா’ படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். தயாரிப்பாளர் கண்ணன் ரவி ஒரே நேரத்தில் பல திரைப்படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமாவுக்கு அளிக்கும் பங்களிப்பு பாராட்டத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இயக்குநர் பாலா, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பலருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருவது பாராட்டத்தக்கது என கூறினார். நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், சமீப காலங்களில் அரிதாகக் காணப்படும் அளவுக்கு திரையுலகமே ஒன்று கூடிய நிகழ்ச்சி இது எனக் குறிப்பிட்டார்.
நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, இப்படத்தின் கதை மற்றும் தனது கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது குழுவினர்மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் கண்ணன் ரவிக்கு நன்றி தெரிவித்தார். படத்தின் வெற்றிக்காக அனைவரும் முழு மனதுடன் உழைப்போம் என்றார்.
நடிகர் ஜெய், இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்து, தனது முழு உழைப்பையும் இந்த திரைப்படத்திற்காக செலுத்துவேன் என்றார்.
பிரம்மாண்டமாக தொடங்கிய ‘டெக்ஸ்லா’ திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான முயற்சியாக உருவாகும் என்ற எதிர்பார்ப்பை இந்த தொடக்க விழா ஏற்படுத்தியுள்ளது.

Grand Launch of ‘Texsla’ Produced by Kannan Ravi Group
The launch ceremony of the Tamil film ‘Texsla’, produced by Kannan Ravi under the banner of Kannan Ravi Group and directed by Aishwarya Rajinikanth, was held grandly in Chennai. The film stars Jai and Suraj Venjaramoodu in the lead roles.
Apart from them, actors Anandaraj, G.M. Sundar, George Maryan and several others are part of the cast. The film’s music is composed by Yuvan Shankar Raja, and Deepak Ravi serves as the co-producer.
Following the strong response to the film’s introductory video released earlier, the official launch event was organized at a star hotel in Chennai. The ceremony witnessed the presence of several prominent personalities from the film industry and public life. Among the special guests were Seeman, Latha Rajinikanth, producer R.B. Choudary, director Bala, music composer Anirudh, producers Sujatha Vijayakumar, G.K.M. Tamil Kumaran, and Amma Creations Siva. Many leading producers, actors, technicians, and distributors from the Tamil film industry also attended the event and extended their wishes to the team.

Speaking at the event, producer Kannan Ravi said that although he is confident when speaking about business, he still considers himself a beginner in cinema. He emphasized that films succeed only with the support of the film industry, media, audiences, and fans. He also expressed happiness about collaborating with the family of Tamil cinema’s Superstar and praised director Aishwarya Rajinikanth for her talent and humility. He added that he believes the film Texsla will turn out very well.
Seeman, Chief Coordinator of Naam Tamilar Katchi, said that a good beginning is equal to half the success and wished the team great success. He also praised producer Kannan Ravi for producing multiple films simultaneously, which reflects his deep passion for cinema.
Director Bala congratulated Aishwarya Rajinikanth and appreciated producer Kannan Ravi for creating opportunities for many people in the industry by producing several films.
Actor Samuthirakani remarked that it was heartening to see the entire Tamil film fraternity coming together for this film’s launch, something that has become rare in recent times.

Actor Suraj Venjaramoodu said that the story and his character in the film are very impressive and expressed happiness about working with director Aishwarya Rajinikanth and producer Kannan Ravi.
Director Aishwarya Rajinikanth thanked everyone who attended the event and expressed gratitude to producer Kannan Ravi for trusting her and the team. She said the entire team would work with dedication to make the film a success.
Actor Jai thanked the director and producer for giving him this opportunity. He said he would give his complete dedication and hard work to make the film successful.
With a grand launch and the presence of many leading personalities from the industry, ‘Texsla’ has already created strong expectations among cinema audiences.
