Monday, September 22
Shadow

கே.ஆர்.ஜி. கண்ணன் ரவி – கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

கே.ஆர்.ஜி. கண்ணன் ரவி – கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களங்களுடன் தரமான படங்களை தொடர்ந்து உருவாக்கி வரும் முன்னணி தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. கண்ணன் ரவி, இணை தயாரிப்பாளராக தீபக் ரவி இணைந்து, தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார்.

“Production No.5” என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த புதிய படத்தில், நடிகர் கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இளம் இயக்குநர் சின்னசாமி பொன்னையா இயக்குகிறார். இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைவது படத்தின் சிறப்பம்சமாக அமைகிறது.

படப்பிடிப்பு கோவில்பட்டியில் பூர்வீக கிராமத்து சூழலில் கிளாப் அடித்து தொடங்கியது. தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிகப்பெரிய அளவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

மிகப்பெரிய பொருட்ச் செலவில் தயாராகும் இப்படம், கண்ணன் ரவியின் நிறுவனம் இதுவரை மேற்கொண்ட படங்களில் மிகச் சிறந்த முயற்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக பல புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தி வரும் அவர், தொடர்ந்து பார்வையாளர்களுக்கு புதுமையான கதைகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இதற்கு முன்னர் பிரபுதேவா – வடிவேலு – யுவன் சங்கர் ராஜா இணையும் இன்னொரு பிரம்மாண்ட முயற்சியையும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

“Production No.5” தொடர்பான கதாநாயகி, மற்ற முக்கிய நடிகர்கள் பட்டியல், தொழில்நுட்பக் குழுவின் முழுமையான விவரங்கள் மற்றும் கதை குறித்த சுவாரஸ்ய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Grand New Film from Producer KRG Kannan Ravi Featuring Gautham Ram Karthik Officially Launched

Producer KRG Kannan Ravi, who has consistently made headlines with his prestigious & promising ventures , has now embarked upon his latest project.

Tentatively titled “Production No.5”, the film is produced on a lavish scale in association with Deepak Ravi and features Gautham Ram Karthik in the lead. The project marks the directorial debut of Chinnasamy Ponnaiya, with music composed by the musical icon Yuvan Shankar Raja.

Filming commenced in Kovilpatti and will unfold across an array of exotic landscapes, including Thoothukudi, Tirunelveli, Tenkasi, Theni, Pollachi, and Kashmir.

True to his vision of nurturing fresh talent and presenting distinctive narratives, Kannan Ravi, together with Deepak Ravi, mounts this production with exceptional scale and high artistic values.

It is worth noting that the production house recently created considerable anticipation by announcing another compelling collaboration, bringing together Prabhudheva – Vadivelu – Yuvan Shankar Raja.

Further announcements regarding the female lead, star cast, technical crew, and Interesting facts about the projects will be unveiled in due course.