
தமிழ் சினிமாவில் நல்ல படங்களை தயாரிக்க ஒரு சில நிறுவனங்கள் தான் உள்ளது அதில் ஒருவர் இயக்குனர் பா.ரஞ்சித் இவர் நல்ல படங்கள் இயக்குவதோடு நல்ல படங்களையும் தயாரிக்கணும் என்ற எண்ணத்தில் நீலம் ப்ரொடக்ஷன் என்ற பெயரில் படங்களை தயாரித்து வருகிறார் அந்த வகையில் அவரின் முதல் தயாரிப்பு பரியேரும் பெருமாள் உலக சினிமாவை திரும்பி பார்க்கவைத்தது இதன் தொடர்ச்சியாக யாவரின் இரண்டாவது படைப்பு தான் குண்டு இந்த படமும் மிக சிறந்த கருத்தையும் அதேபோல தமிழ் சினிமாவுக்கு ஒரு எடுத்துகாட்டு படமாக தான் அமைந்துள்ளது அந்த வகையில் ரஞ்சித்துக்கு இந்த படமும் ஒரு மைல் கல்லாக தான் அமைந்துள்ளது .
ரஞ்சித் ஒரு சிறந்த இயக்குனர் என்பதாலே என்னவோ அவர் தேர்ந்துடுக்கும் இயக்குனர்களும் சிறந்த இயக்குனர்களாகவும் நாலா கதைகளும் தேவையான சிந்தனைகளும் சொல்லும் கதைக்களமாக கொடுத்து வருகிறார். என்று சொன்னால் மிகையாகது .

சரி ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகும் குப்டு படத்தை பற்றி இப்போது பார்க்கலாம் இந்த படத்தில் தினேஷ் நாயகனாகவும் ஆனந்தி நாயகியாகவும் வலம் வருகிறார்கள். இவர்களுடன் ரித்விகா லிஜேஷ்,மாரிமுத்து முனிஷ்காந்த் ஜான் விஜய் மற்றும் பலர் நடிப்பில் கிஷோர்குமார் ஒளிப்பதிவில் அதியன் அதிரை இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் குண்டு
இரண்டாம் உலக போரில் போட்ட குண்டு இன்றும் இந்தியாவில் கடலுக்கு அடியில் சிதறி கிடக்கிறது இந்த குண்டுகள் தற்போதும் சில இடங்களில் வெடித்து வருகிறது அதை பற்றிய ஒரு படம் தான் குண்டு
படத்தின் ஆரம்பக் காட்சியில் 2ஆம் உலக போரின்போது வெடிக்காமல் இருந்த ஒரு சக்தி வாய்ந்த அணு குண்டு ஒன்று மாமல்லபுர கடற்கரை ஓரத்தில் ஒதுங்குகிறது.
உடனே இந்த செய்தி அந்த பகுதி முழுவதும் பரவுகிறது.
இதனையறிந்த போலீஸ் தங்கள் கன்ட்ரோலுக்கு அந்த குண்டை எடுத்து காவல் நிலைய வளாகத்தில் வைக்கின்றனர். இதனை ஒரு திருடன் எடுத்து கொண்டு காயிலான் கடையில் போட்டு பணம் வாங்கி செல்கின்றார்.
அங்கிருக்கும் பழைய இரும்பு பொருட்களுடன் அந்த அணு குண்டையும் எடுத்துக் கொண்டு மற்றொரு ஊருக்கு செல்கிறார் லாரி டிரைவர் தினேஷ்.
இந்த குண்டை தேடி போலீஸ் உதவியுடன் ஒரு ஊழல் கும்பல் வருகிறது. இது மீடியாக்களில் சிக்கினால் பெரும் பிரச்சினையாகிவிடும் என்பதாலும் போலீஸ் தேடி அலைகிறது.
‘இதனிடையில் சமூக ஆர்வலரும் பிரபல பத்திரிகையாளருமான ரித்விகாவும் இதை தேடி வருகிறார்.
ஒரு கட்டத்திற்கு பிறகு தான் இந்த குண்டு பற்றி அறிகிறார் தினேஷ். அதன்பின்னர் என்ன செய்தார்? அந்த குண்டை யாரிடம் ஒப்படைத்ததார் குண்டு வெடித்ததா இல்லையா என்பதே மீதிக்கதை.

தினேஷ் இந்த கதைக்காக மிகவும் மினகெட்டு இருக்கிறார்.அற்புதமான நடிப்பில் கதபாத்திரதுக்கு உயிகொடுத்து இருக்கிறார் காதலிலும் சரி காட்டு கத்தலிலும் சரி குடிகாரனாகவும் சரி இயல்பானா நடிப்பில் நம்மை மிகவும் கவர்ந்து இருக்கிறார்.
சித்ரா என்ற டீச்சர் கேரக்டரில் கயல் ஆனந்தி. கயல் படத்திற்கு பிறகு அவரை குண்டு ஆனந்தி என்றே சொல்லலாம். ஆனால் அம்மணி இன்னும் ஸ்லிம்மாக தான் இருக்கிறார்.
முண்டாசுப்பட்டி, ராட்சசன் படத்திற்கு அருமையான நடிப்பை கொடுத்துள்ளார் முனிஷ்காந்த். அப்பாவித்தனமாக அவர் குண்டு மீது தண்ணி ஊற்றி நமத்துபோக வைப்பது சிரிப்பை நிச்சயம் வரவழைக்கும்.
நம்ம நாட்டு குண்டு நம்மளை கொல்லாது? என இவர் கேட்கும் காட்சிகள் செம.
இயக்குனர் அதியன் அதிரா தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு சிறந்த இயக்குனர் இந்த கதைக்காகவும் இரண்டாம் உலக போர் விவரங்களை மிகவும் அழகா காண்பிதுள்ளார் அதோடு இந்தியாவில் நடக்கும் மிக பெரிய குற்றத்தையும் தெளிவாக காண்பிதுள்ளார் கைலான் கடையில் வேலை பார்ப்பவர்களின் வாழ்கை முறையும் அவர்களின் கஷ்டத்தையும் மிக அழகா காண்பிதுள்ளார்
டென்மாவின் இசையில் பின்னணி இசை மிரட்டல். பாடல்களும் கேட்கும் ரகம் தான். கூத்து பாடல்கள் நிறைய உள்ளன.கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு சூப்பர். காயிலான் கடைகள் கூட அழகான அழுக்காக தெரிகிறது.
மொத்தத்தில் குண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு வைரம் Rank 4/5
