Monday, February 2
Shadow

ஜிவி பிரகாஷ் குமார் – அனஸ்வரா ராஜன் இணைந்து நடித்துள்ள புதிய படமான ‘லக்கி’.நேரடி ஓடிடி ஒரிஜினல் படமாக பிப்ரவரி 20, 2026 அன்று JioHotstar தளத்தில் வெளியாக உள்ளது

ஜிவி பிரகாஷ் குமார் – அனஸ்வரா ராஜன் இணைந்து நடித்துள்ள புதிய படமான ‘லக்கி’.நேரடி ஓடிடி ஒரிஜினல் படமாக பிப்ரவரி 20, 2026 அன்று JioHotstar தளத்தில் வெளியாக உள்ளது.

 

ஜிவி பிரகாஷ் குமார் – அனஸ்வரா ராஜன் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படமான ‘லக்கி’, நேரடி ஓடிடி ஒரிஜினல் படமாக பிப்ரவரி 20, 2026 அன்று JioHotstar தளத்தில் வெளியாக உள்ளது. Hotstar Specials பிரிவில் வெளியாகும் இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை JioHotstar வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற JioHotstar South Unbound நிகழ்வில், ‘லக்கி’ திரைப்படத்தின் உலகம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நிகழ்வில் வெளியிடப்பட்ட டீசரும், புதிய போஸ்டரும் படத்தின் தனித்துவமான களத்தை வெளிப்படுத்தின. வெளிப்பார்வைக்கு அப்பாவியாகத் தோன்றும் ஒரு நாய்க்குட்டி, அரசியல் அதிகார மையங்களின் கவனத்தை ஈர்க்கும் தருணத்தில் உருவாகும் எதிர்பாராத சம்பவங்களே கதையின் மையமாக அமைகின்றன.

நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், அரசியல் குழப்பங்களும் சுவாரசியமான திருப்பங்களும் இணைந்து, ‘லக்கி’ ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கு படமாக உருவாகியிருப்பதை வெளியான போஸ்டர் உறுதி செய்கிறது.

உதய் மகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் தேவதர்ஷினி முக்கிய வேடத்தில் தோன்றியுள்ளார். அப்பாவித்தனம் மற்றும் அதிகாரம் மோதும் போது கட்டுப்பாட்டை மீறி நடைபெறும் நிகழ்வுகள், நகைச்சுவை, அரசியல், ஆக்‌ஷன் மற்றும் மனதைத் தொடும் உணர்வுகளுடன் திரையில் விரிகின்றன.

புதிய கதைக்களம், வலுவான நடிப்பு, உணர்ச்சிகரமான தருணங்கள் என அனைத்து அம்சங்களும் ஒருங்கிணைந்து, குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் செல்லப்பிராணிகளை நேசிப்பவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக ‘லக்கி’ உருவாகியுள்ளது.
பிப்ரவரி 20, 2026 அன்று, தமிழ் மொழியில், JioHotstar தளத்தில் ‘லக்கி’ திரைப்படம் உலகளாவிய பார்வையாளர்களை சந்திக்க உள்ளது.

JioHotstar பற்றி:

ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைவின் மூலம் உருவான JioHotstar, இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக திகழ்கிறது. புதுமையான தொழில்நுட்பம் மற்றும் பல்வகை கதைக்களங்களுடன், இந்திய பார்வையாளர்களின் பொழுதுபோக்கு அனுபவத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

GV Prakash Kumar and Anaswara Rajan starrer “Lucky” to premiere as a Hotstar Special on JioHotstar on February 20
The upcoming film “Lucky”, starring GV Prakash Kumar and Anaswara Rajan, is set to release as a direct OTT original on February 20, 2026, exclusively on JioHotstar under the Hotstar Specials banner. The official announcement was recently made by JioHotstar.

The unique world of Lucky was unveiled for the first time at the JioHotstar South Unbound event. The teaser and the newly released poster offer a glimpse into the film’s distinctive narrative. What begins with an innocent-looking puppy soon spirals into unexpected chaos when it draws the attention of powerful political circles, forming the core of the story.
Blending humor with emotional depth, political satire, and engaging twists, Lucky promises to be a wholesome family entertainer. The latest poster highlights the film’s tone, combining comedy, confusion, and heartfelt moments.

Directed by Udhay Mahesh, the film features GV Prakash Kumar and Anaswara Rajan in lead roles, with Devadarshini playing a pivotal character. The narrative explores the clash between innocence and authority, portraying how situations spiral out of control when power and purity collide, presented through comedy, action, politics, and touching emotional sequences.

With a fresh storyline, strong performances, and emotionally resonant moments, Lucky is expected to appeal to families, youth, and pet lovers alike, making it a complete entertainer.
“Lucky” will premiere in Tamil on February 20, 2026, exclusively on JioHotstar.

About JioHotstar:

JioHotstar is one of India’s leading streaming platforms, formed through the integration of JioCinema and Disney+ Hotstar. With innovative technology and compelling storytelling, JioHotstar aims to redefine entertainment for audiences across India.