Monday, February 2
Shadow

காதலர் தின வெளியீட்டுக்கு தயாராகும் ‘ட்ரீம் கேர்ள்’ “நல்ல படம் ஓடினால் அதுவே பெரிய படம்” – இயக்குநர் எம்.ஆர். பாரதி உறுதி

காதலர் தின வெளியீட்டுக்கு தயாராகும் ‘ட்ரீம் கேர்ள்’ “நல்ல படம் ஓடினால் அதுவே பெரிய படம்” – இயக்குநர் எம்.ஆர். பாரதி உறுதி

2026 காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள காதல் திரைப்படம் ‘ட்ரீம் கேர்ள்’. சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில், எம்.ஆர். பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படம், மசாலா கலப்பில்லாத தூய காதல் கதையாக உருவாகியுள்ளது.
நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தி மற்றும் நடிகை பபிதாவின் மகளான ஹரிஷ்மிதா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

கனவுகளைத் துரத்தும் காதல்
படம் குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி பேசுகையில்,
“இது ஒரு சமகால காதல் கதை. கதாநாயகனுக்கு இயக்குநராக வேண்டும் என்பது கனவு. கதாநாயகிக்கோ பாடகியாக வேண்டும் என்ற ஆசை. இருவரும் தங்கள் கனவுகளைத் துரத்திக் கொண்டே வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் காதல் மலர்கிறது. அந்த காதலோடு சேர்ந்து ஒரு கனவும் உருவாகிறது. அந்த கனவு நிகழ்த்தும் மாயங்களும், அதன் விளைவுகளுமே ‘ட்ரீம் கேர்ள்’ படத்தின் மையம்” என்கிறார்.
இந்தக் கதையில் பாரம்பரிய வில்லன் கதாபாத்திரம் இல்லை.
“வேண்டுமானால் கனவே வில்லன் என்று சொல்லலாம்” என்று சிரித்துக் கூறுகிறார் இயக்குநர்.

ஊட்டியில் முழு படப்பிடிப்பு
கதையின் குளுமையை உணர்த்தும் வகையில், முழு படப்பிடிப்பையும் ஊட்டியில் நடத்த முடிவு செய்ததாக கூறும் பாரதி,
“20 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்தோம். சரியான திட்டமிடல் இருந்ததால் ஒரு நாள்கூட படப்பிடிப்பு தடைபடவில்லை. இயற்கையும் எங்களுக்கு உதவியது. பனி, மழை அனைத்தும் தேவையான நேரத்தில் கிடைத்தது” என்கிறார்.

குறைந்த பட்ஜெட் – தெளிவான பார்வை
இன்றைய சினிமா செலவினங்கள் குறித்து விமர்சனமாகப் பேசும் இயக்குநர்,
“சரியான திட்டமிடல் இருந்தால் 25 லட்ச ரூபாயில் கூட ஒரு நல்ல படம் எடுக்க முடியும். நல்ல படம் ஓடினால் அதுவே பெரிய படம். ஆனால் சிலர் அதே படத்திற்கு இரண்டு கோடி செலவு செய்கிறார்கள். இதுதான் சினிமாவை நெருக்கடிக்குள் தள்ளுகிறது” என்கிறார்.
பெரிய நட்சத்திரங்களுக்கான பெரிய முதலீடுகளை அவர் மறுக்கவில்லை.
“ஆனால் சிறிய பட்ஜெட் படங்களில் சில லட்சங்களைத் தாண்டினாலே தயாரிப்பாளருக்கு அது பெரிய சுமை. அதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என வலியுறுத்துகிறார்.

திறமையே அடையாளம்
‘ட்ரீம் கேர்ள்’ படத்திற்காக தயாரிப்பாளரைத் தேடி அலைந்ததில்லை என்று கூறும் பாரதி,
“நான் தேடியது திறமைசாலிகளை மட்டுமே. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் நடிப்பு மற்றும் திறமை அடிப்படையிலேயே தேர்வு செய்தேன். அதற்கான பலன் படத்தில் தெளிவாக கிடைத்திருக்கிறது” என நம்பிக்கையுடன் சொல்கிறார்.

சென்சார் குறித்து தெளிவான நிலைப்பாடு
சமீப காலங்களில் தணிக்கைத் துறை குறித்து நிலவும் விமர்சனங்கள் பற்றி அவர் கூறுகையில்,
“சென்சார் துறை நல்ல படைப்புக்கு எதிரானது என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கென விதிமுறைகள் உள்ளன. அவற்றைப் புரிந்து கொண்டு படம் எடுத்தால் பிரச்சினை இல்லை. என் படத்திலும் சில வெட்டுகள் இருந்தன. திருத்திக் கொடுத்தோம். அவ்வளவுதான்” என்கிறார்.

தொழில்நுட்பக் குழு
இப்படத்திற்கு
ஒளிப்பதிவு : சாலமன் போவாஸ் இளமாறன்
வசனம் : ஹேமந்த் செல்வராஜ், ராம் சரசுராம், எம்.டி.தமிழரசன்
திரைக்கதை : எம்.டி.தமிழரசன், கிருத்திகா தாஸ்
எடிட்டிங் : எஸ்.பி.அஹமத்
தயாரிப்பு வடிவமைப்பு : எஸ்.ரதி
என்.காவேரி மாணிக்கம், டாக்டர் ஆர்.குணசேகரன், பி.ஆதித்யன் ஆகியோர் இணைத் தயாரிப்பாளர்களாகப் பங்கெடுத்துள்ளனர்.

ஒரு பாடல் – ஒரு காதல்
கதை அழுத்தமாக இருப்பதால், இப்படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
மசாலா இல்லாத, கனவுகளும் காதலும் கலந்த ஒரு நவீன காதல் கதையாக உருவாகியுள்ள ‘ட்ரீம் கேர்ள்’, பிப்ரவரி 14 காதலர் தினத்தில் திரையரங்குகளை அடைய தயாராக உள்ளது.

Here is a clear, press-friendly English translation of the content:‘Dream Girl’ Set for Valentine’s Day Release

“If a film is good and runs well, it automatically becomes a big film,” says director M.R. Bharathi
The romantic film ‘Dream Girl’ is all set to hit theatres on February 14, 2026, coinciding with Valentine’s Day. Produced by Charulatha Films, the movie is written and directed by M.R. Bharathi and is positioned as a pure love story with no commercial “masala” elements.
Actor Jeeva plays the male lead, while Harishmitha—daughter of popular stunt artiste Jestine and actress Babitha—plays the female lead. The film also features Prabhu Sastha, Dhuruvan, and Indira in key roles.

A Love Story Driven by Dreams
Speaking about the film, director M.R. Bharathi said,
“This is a contemporary love story. The hero dreams of becoming a film director, while the heroine aspires to be a singer. Both of them chase their dreams while enjoying life to the fullest. Love blossoms between them, and along with love, a dream emerges. That dream creates certain illusions, and the colorful consequences of those illusions form the core of Dream Girl.”
He added that the film has no conventional villain.
“If at all, the dream itself can be considered the villain,” he remarked.

Shot Entirely in Ooty
To complement the cool and refreshing tone of the story, the entire film was shot in Ooty.
“The complete shoot was wrapped up in just 20 days. With proper planning, there wasn’t a single day of disruption. Nature cooperated fully—mist and rain arrived exactly when we needed them,” the director said.

Budget Discipline and Film Economics
Commenting on rising production costs in cinema, Bharathi stated,
“With proper planning, a good film can be made within ₹25 lakh. If a film runs well, it becomes a big film by itself. Spending ₹2 crore on the same content is unnecessary. This unplanned spending is what pushes cinema into crisis.”
While he acknowledged the necessity of large budgets for star-driven projects, he emphasized that
“Low-budget films cannot afford even small overruns. Producers simply cannot bear crore-level losses.”

Talent Over Market Value
Bharathi revealed that he never searched for producers with this script.
“I only looked for talented people. Every actor and technician in this film was selected purely on merit, not appearance or market value. The results are visible on screen.”

Stand on Censorship
Addressing the perception that the censor board is anti-creativity, he clarified,
“I don’t believe the censor board is against good cinema. They function according to defined rules. Filmmakers must understand those rules. My film had a few cuts; I made the corrections and the issue was resolved. Blaming the censor board is meaningless.”
He further noted that in 2025, several high-budget films featuring major stars were rejected by audiences, while small films with strong content succeeded.
“People cannot be fooled. A film that runs is a good film—and that itself becomes a big film.”
Technical Crew
Cinematography: Solomon Boaz Ilamaran
Dialogues: Hemanth Selvaraj, Ram Sarasuram, M.D. Thamizharasan
Screenplay: M.D. Thamizharasan, Krithika Das
Editing: S.P. Ahmed
Production Design: S. Rathi
Associate Director: M. Pon Bhuvaneswaran
N. Kaveri Manickam, Dr. R. Gunasekaran, and B. Adhithyan served as co-producers.

One Song, Strong Story
Given the narrative’s depth, Dream Girl features only one song. The film promises a modern, heartfelt love story centered on dreams and emotions and will release worldwide on February 14, 2026.