Thursday, April 30
Shadow

ஹைதராபாத் – உலக விஷுவல் எஃபெக்ட்ஸ் மையமாக மாறும் பாதை: நெட்ஃபிலிக்ஸ் ‘ஐலைன் ஸ்டுடியோஸ்’ தொடக்கம்!

ஹைதராபாத் – உலக விஷுவல் எஃபெக்ட்ஸ் மையமாக மாறும் பாதை: நெட்ஃபிலிக்ஸ் ‘ஐலைன் ஸ்டுடியோஸ்’ தொடக்கம்!

இந்தியாவின் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் டிஜிட்டல் தயாரிப்பு துறைக்கு புதிய திருப்பமாக, நெட்ஃபிலிக்ஸ் தனது உலகளாவிய தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப மையமான ஐலைன் ஸ்டுடியோஸை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. உலகளவில் திரைப்படங்களிலும், சீரிஸ்களிலும் பயன்படுத்தப்படும் மேம்பட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் நவீன தயாரிப்பு தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே உருவாக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்டுடியோ, இந்தியாவின் AVGC (Animation, Visual Effects, Gaming, Comics) துறையில் நீண்டகால முதலீட்டிற்கான முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் உருவாகும் திறமைகளை உலகளாவிய தயாரிப்புகளுடன் இணைக்கும் மையமாக ஹைதராபாத் மாறும் என்பதையும் இந்த தொடக்கம் சுட்டிக்காட்டுகிறது.

சுமார் 32,000 சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம், அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் வசதிகள், ஜெனரேட்டிவ் விர்ச்சுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பம் மற்றும் ஹைபிரிட் கிளவுட் கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் பணியாளர்களுக்கான நவீன பணிச்சூழலும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே லாஸ் ஏஞ்சல்ஸ், வான்கூவர், சியோல் மற்றும் லண்டன் நகரங்களில் இயங்கி வரும் ஐலைன் ஸ்டுடியோஸ், ஹைதராபாத்தை தனது ஐந்தாவது உலகளாவிய மையமாக தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியா உலகளாவிய திரைப்பட தயாரிப்பு மற்றும் டிஜிட்டல் காட்சியமைப்பு துறையில் மேலும் முக்கிய இடத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடக்க விழாவில் ஐலைன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் ஷாபிரோ, தெலங்கானா முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் சஞ்சய் ஜாஜு மற்றும் நடிகர்-தயாரிப்பாளர் ராணா டகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “படைப்பாற்றல், தொழில்நுட்பம் மற்றும் உலகத் திறமைகள் ஒன்றிணையும் நகரமாக ஹைதராபாத் வளர்ந்து வருகிறது. ஐலைன் ஸ்டுடியோஸ் தொடக்கம், திரைப்படம் மற்றும் AVGC துறையில் ஹைதராபாத்தின் நிலையை மேலும் வலுப்படுத்தும்,” என்று தெரிவித்தார்.

மேலும் நடிகர் ராணா டகுபதி பேசுகையில், “இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் இத்தகைய வாய்ப்புகள் குறைவாக இருந்தன. இன்று உலக தரத்தில் செயல்படும் ஸ்டுடியோக்கள் இங்கு தொடங்கப்படுவது நகரத்தின் வளர்ச்சியை காட்டுகிறது. இது புதிய தலைமுறைக்கு பெரிய வாய்ப்புகளை உருவாக்கும்,” என்று கூறினார்.

நெட்ஃபிலிக்ஸ் சார்பில் ஜெஃப் ஷாபிரோ கூறுகையில், “கலைத்திறன் மற்றும் தொழில்நுட்ப திறன் இணைந்த திறமைகள் இந்தியாவில் அதிகம் உள்ளது. அதனால் தான் ஹைதராபாத்தை உலகளாவிய கதை சொல்லல் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மையமாக வளர்க்கும் நோக்கத்தில் இந்த ஸ்டுடியோவை தொடங்கியுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.

இந்த தொடக்கம், இந்தியாவை உலகளாவிய டிஜிட்டல் தயாரிப்பு மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையில் மேலும் முன்னணிக்கு கொண்டு செல்லும் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.

 


Hyderabad Moves Towards Becoming a Global VFX Hub: Netflix Launches Eyeline Studios
Marking a significant boost to India’s animation, visual effects, and digital production sector, Netflix has launched Eyeline Studios, its global production and technology hub, in Hyderabad. The initiative aims to bring advanced visual effects and next-generation production technologies used in international films and series to India.
The new studio is seen as a major step in strengthening long-term investments in India’s AVGC (Animation, Visual Effects, Gaming and Comics) sector. It is also expected to position Hyderabad as a key center that connects Indian creative talent with global productions.
Spread across 32,000 square feet, the new facility is equipped with cutting-edge visual effects infrastructure, generative virtual effects technology, and a strong hybrid cloud system. The workspace has been designed to encourage collaboration, creativity, and employee well-being.
With existing studios in Los Angeles, Vancouver, Seoul, and London, Eyeline Studios has now chosen Hyderabad as its fifth global hub. This move is expected to further strengthen India’s presence in the global film production and digital visual effects industry.
The inauguration ceremony was attended by Eyeline Studios CEO Jeff Shapiro, Telangana Chief Minister A. Revanth Reddy, Information and Broadcasting Secretary Sanjay Jaju, and Indian actor-producer Rana Daggubati, among others.
Speaking at the event, Chief Minister Revanth Reddy said Hyderabad continues to grow as a city where creativity, technology, and global talent come together. He added that the arrival of Eyeline Studios would further strengthen Hyderabad’s position in the film and AVGC sectors.
Actor and producer Rana Daggubati recalled that opportunities like this were very limited in Hyderabad nearly twenty years ago. He noted that the launch of world-class studios in the city today reflects how far the industry has progressed and will open new opportunities for the next generation of creators.
Eyeline Studios CEO Jeff Shapiro also emphasized that India has a strong pool of talent that combines artistic creativity with technical expertise. He said Hyderabad was chosen because of its strong technological ecosystem and film culture, and the studio aims to contribute to global storytelling from India.
The launch of Eyeline Studios is expected to play a key role in positioning India as a major global hub for digital production and visual storytelling.