Monday, June 5
Shadow

நிவின் பாலிக்கு நான் வில்லன் இல்லை பிரகாஷ்ராஜ்

2014இல் கன்னடத்தில் ரக்சித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான படம் உளிதவரு கண்டந்தை. கிஷோர், தாரா, அச்சுத்குமார் உள்பட பலர் நடித்த அப்படம் தற்போது தமிழில் ரீமேக்காகி வருகிறது.

சண்டமரியா என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் மலையாள நடிகர் நிவின்பாலி நாயகனாக நடிக்கிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜூம் நடிக்கிறார்.

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பதால் அவர்தான் வில்லன் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்கவில்லையாம். இதுவரை நடிக்காத ஒரு குணசித்ர வேடத்தில் நடிக்கிறாராம்.

இந்த படத்தில் நெகடீவ் ரோலில் அவரை நடிக்குமாறு கேட்டபோது, படத்துக்குப் படம் வில்லனாக நடித்து எனக்கு போரடித்து விட்டது. அதனால் ஒரு மாறுதலுக்காக இந்த படத்தில் குணசித்ர வேடத்தில் நடிக்கிறேன் என்று கேட்டு வாங்கி நடித்து வருகிறாராம் பிரகாஷ்ராஜ்.

Leave a Reply