Saturday, April 18
Shadow

‘நான் மதுபோதையில் இருந்தேனா?-காயத்ரி ரகுராம் விளக்கம்

நடிகை காயத்ரி ரகுராம் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாகவும், போலீசாரிடம் பிடிபட்டு அபராதம் கட்டியதாகவும் காலையில் செய்திகள் பரவியது. இதனை மறுத்து தற்போது காயத்ரி விளக்கமளித்துள்ளார்.

அதில அவர், “நான் எனது படப்பிடிப்பை முடித்து வீடு திரும்புகையில் என் சக நடிகரை அவரது வீட்டில் இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸார் வாகன சோதனை செய்தனர். மற்றபடி எனக்கும், அவர்களுக்கு எந்த வாக்குவாதமும் ஏற்படவில்லை. அங்கிருந்து 10 நிமிடங்களில் நானே காரை ஓட்டிக் கொண்டு வீடு சென்றேன்.

என்னை பற்றி செய்தி வெளியிட்ட நிருபர் தான் போதையில் இருந்திருப்பார் போலும். அவருக்கு என்ன என்ன தோன்றியதோ அத்தனையும் எழுதியுள்ளார். இங்கு தனி மனித சுதந்திரம் என்பதே இல்லாமல் போய்விட்டது” என்று சாடி பேசியுள்ளார்.