Monday, February 16
Shadow

தக் லைஃப் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பேன் – நடிகை ஸ்ருதிஹாசன்

தக் லைஃப் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பேன் – நடிகை ஸ்ருதிஹாசன்

கமலஹாசன் சிம்பு நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் அதன் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நாளை தனியார் கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

இதில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து சென்னை வந்த ஸ்ருதிஹாசன் சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்……

கூலி படம் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து கேட்ட பொழுது கூலி படத்திற்கான டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனக்கு படம் நன்றாக பிடித்திருக்கிறது அனைவரும் ரசிப்பார்கள்.

தக் லைஃப் படத்தின் பாடல்களை பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்த ஏ ஆர் ரகுமான் சாருக்கு ரொம்ப நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்பா படத்தில் பாடியது மகிழ்ச்சியாக உள்ளது படம் வெளியானதும் ரசிகர்களுடன் சென்று பார்பேன் சிம்பு திரிஷா உட்பட அனைவரும் நடித்திருக்கிறார்கள் படம் பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது.

விஜய் அரசியல் வருகை குறித்து கேட்டதற்கு,
கருத்து கூற விரும்புவதில்லை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

கூலி திரைப்படம் குறித்து லோகேஷ் பேசினால் தான் நன்றாக இருக்கும் போட்டியாக வரும் அனைத்து படங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ஆனால் என்னுடைய படத்தை நான் ரசிக்கிறேன்.

ரஜினி நடிகர் ரஜினியுடன் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவத்துடனும் மகிழ்ச்சியாகவும் இருந்தது

நடிகர் கமலுடன் சேர்ந்து நடிப்பீர்களா என கேட்ட பொழுது,

நான் எப்பொழுது வேண்டுமானாலும் ரெடியாக இருக்கிறேன் அப்பா கூறினால் நான் ரெடி தான் எனக் கூறி புறப்பட்டுச் சென்றார்.