Monday, May 20
Shadow

இடியட் திரைவிமர்சனம் (ரேட்டிங் 3/5)

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரூம் மிர்ச்சி சிவா. நடிப்பில் வெளியாகியுள்ள இடியட் திரைபடத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

கதை என பெரிதாக எதுவும் இல்லாமல் பேய்களை வைத்து தில்லுக்கு துட்டு பணம் பாணியில் முயற்சி செய்துள்ள திரைப்படம் தான் இடியட். படத்திலுள்ள ஒருவரின் அறியாமையை வைத்து காமெடி படமாக இயக்கி உள்ளார் ராம் பாலா.

மிர்ச்சி சிவா வழக்கம்போல் கலகலப்பான நடிப்பை கொடுத்துள்ளார். நிக்கி கல்ராணி அவரது பங்கிற்கு அழகான நடிப்பை கொடுத்துள்ளார்.

காமெடி நடிகர்கள் எக்கச்சக்கமாக இருந்தாலும் முதல் பாதியில் பெரிய அளவில் காமெடி காட்சிகள் நம்மை கவரவில்லை. இரண்டாம் பாதியில் ஊர்வசி ஆனந்தராஜ் உள்ளிட்டோர் இடம்பெறும் காட்சிகள் நம்மை சிரிக்க வைக்கின்றன.

படத்தில் லாஜிக் பற்றியெல்லாம் கவலைப்படாமல் காமெடி செய்வதை குறிக்கோளாக வைத்து முயற்சி செய்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவும் இசையும் பலமாக அமைந்துள்ளது. ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றிருப்பது ஆறுதல் கொடுக்கிறது.

ஆனால் முதல் பாதியில் காமெடி காட்சிகளை கொடுத்திருந்தால் தில்லுக்குதுட்டு படங்களைப் போல இதுவும் பேசப்படும் படமாக இருந்திருக்கும். ராம்பாலா படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்போடு போனால் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

படத்தின் பிளஸ்:

ஊர்வசி, ஆனந்தராஜ் நடிப்பு, இசை மற்றும் ஒளிப்பதிவு, இரண்டாம் பாதியில் இடம்பெற்ற காமெடி காட்சிகள்

படத்தின் மைன்ஸ்:

முதல் பாதி, அளவுக்கதிகமான உருவ கேலி காட்சிகள், லாஜிக் இல்லாத காட்சிகள்

மொத்தத்தில் இடியட் ஒருமுறை பார்க்கலாம் என்ற ரகமே.