Friday, April 17
Shadow

தயாரிப்பாளர் சங்கத்துக்காக இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா

தமிழ்த் திரைப்பட தயா ரிப்பாளர்கள் சங்கம், உறுப் பினர்கள் நலனுக்காக பல்வேறு நலத் திட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக இசை யமைப்பாளர் இளைய ராஜாவை வைத்து ‘இசை ராஜா 75’ என்ற தலைப்பில் பிரம்மாண்ட இசை விழாவை வரும் ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக நேற்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் விஷால், நடிகர் பார்த்திபன், தயாரிப்பாளர்கள் சங்க நிர் வாகிகள் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டவர்கள் இசையமைப் பாளர் இளையராஜாவை சந்தித்து இசை நிகழ்ச்சிக் கான ஒப்பந்தம் மேற்கொணடனர்.