Friday, November 7
Shadow

லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியத்தில் பிப்ரவரி 12, 2026 அன்று ‘பிரமயுகம்’ திரைப்படம் திரையிடப்படுகிறது!

லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியத்தில் பிப்ரவரி 12, 2026 அன்று ‘பிரமயுகம்’ திரைப்படம் திரையிடப்படுகிறது!

நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ராகுல் சதாசிவன் இயக்கத்தில் உருவான மலையாள திரைப்படமான ‘பிரமயுகம்’ (2024), லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகாடெமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அரங்கில் திரையிடப்படுகிறது.

இந்த திரைப்படம், ஜனவரி 10 முதல் பிப்ரவரி 12, 2026 வரை நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சித் தொடரின் இறுதி நாளான பிப்ரவரி 12 அன்று திரையிடப்பட உள்ளது.

ராகுல் சதாசிவன் எழுதி இயக்கிய ‘பிரமயுகம்’ திரைப்படம், கேரள நாட்டுப்புறக் கதைகளின் இருண்ட காலத்தை மையமாகக் கொண்டு, பயம், சக்தி, மற்றும் மனித பலவீனங்களை வெளிப்படுத்தும் கதையாகும். கருப்பு-வெள்ளை (Black & White) வடிவில் வெளிவந்த இந்த படம் அதன் தனித்துவமான கதை சொல்லல் மற்றும் ஆழமான பார்வைக்காக பரவலான பாராட்டைப் பெற்றது.

மம்முட்டி முக்கிய கதாபாத்திரமான கொடுமோன் போட்டியாக நடித்துள்ளார். மேலும், அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் ஷெஹ்னாத் ஜலால் (ISC) ஒளிப்பதிவு, கிறிஸ்டோ சேவியர் இசை, ஜோதிஷ் சங்கர் தயாரிப்பு வடிவமைப்பு, ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பு, ஜெயதேவன் சக்கடத் ஒலி வடிவமைப்பு, எம்.ஆர். ராஜகிருஷ்ணன் ஒலி கலவை, டி.டி. ராமகிருஷ்ணன் வசனம், ரோனெக்ஸ் சேவியர் மற்றும் ஜார்ஜ் எஸ். ஒப்பனை, பிரீத்திஷீல் சிங் டி’சோசா புரோஸ்தெடிக்ஸ், மெல்வி ஜெ ஆடை வடிவமைப்பு ஆகிய பணிகளைச் செய்துள்ளனர்.

‘பிரமயுகம்’ பற்றி

மம்முட்டி நடித்த இந்த ஹாரர்–த்ரில்லர் திரைப்படம், ஹாரர் வகை படங்களை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். YNOT ஸ்டுடியோஸ் உடன் இணைந்து இது வெளியிடப்பட்டது.

அதே இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன், நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் தனது இரண்டாவது தயாரிப்பாக, பிரணவ் மோகன்லால் நடித்த ‘டைஸ் ஐரே’ திரைப்படத்தை அக்டோபர் 31, 2025 அன்று வெளியிட்டது.

தி அகாடெமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் பற்றி

சினிமா கலை, அறிவியல் மற்றும் கலைஞர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் இது. திரையிடல்கள், கண்காட்சிகள், நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி முயற்சிகளின் மூலம் சினிமாவை புரிந்துகொள்வதும், கொண்டாடுவதும், பாதுகாப்பதும் இதன் நோக்கமாகும்.

பிரிட்ஸ்கர் விருது பெற்ற கட்டிடக் கலைஞர் ரென்சோ பியானோ வடிவமைத்த இந்த மியூசியம், வரலாற்றுச் சிறப்புமிக்க சபான் கட்டிடத்தை (முன்னர் மே கம்பெனி கட்டிடம் – 1939) புதுப்பித்து உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கு 50,000 சதுர அடியில் விரிந்த கண்காட்சி இடங்கள், இரண்டு அதிநவீன திரையரங்குகள், ஷெர்லி டெம்பிள் கல்வி மையம், பொதுமக்களுக்கு திறந்திருக்கும் அழகான புறத்தளங்கள் ஆகியவை உள்ளன. வால்ட் டிஸ்னி கம்பெனி பியாஸ்ஸா, ஸ்பீல்பெர்க் ஃபேமிலி கேலரி, அகாடெமி மியூசியம் ஸ்டோர், மற்றும் ஃபான்னி உணவகம் ஆகியவையும் இதில் அடங்கும்.

அகாடெமி மியூசியம் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

Indian Film “BRAMAYUGAM” to screen at Academy Museum in Los Angeles on February 12, 2026

Indian film Bramayugam [2024] [Malayalam], produced by Night Shift Studios & YNOT Studios and written & directed by Rahul Sadasivan, will screen at the Academy Museum of Motion Pictures in Los Angeles.
The screening will take place on February 12, 2026, as part of the Academy Museum’s Where the Forest Meets the Sea: Folklore from Around the World film series, screening January 10 – February 12.
Written and Directed by Rahul Sadasivan, Bramayugam is a haunting exploration of fear, power, and human frailty, set within the dark ages of Kerala’s folklore. The film made and presented in Black & White has been celebrated for its craftsmanship, immersive storytelling, and atmospheric precision.
‘Bramayugam’ stars the legendary Mammootty as Kodumon Potti. Arjun Ashokan, Sidharth Bharathan, and Amalda Liz play significant roles.
The film features cinematography by Shehnad Jalal (ISC), music by Christo Xavier, production design by Jothish Shankar, editing by Shafique Mohammed Ali, sound design by Jayadevan Chakkadath, sound mix by M.R. Rajakrishnan, dialogues by T.D. Ramakrishnan, makeup by Ronex Xavier and George S., prosthetics by Preetisheel Singh D’Souza, and costumes by Melwy J.
About Bramayugam
Bramayugam is a Malayalam feature film starring Mammootty, written and directed by Rahul Sadasivan. It marks the prestigious inaugural production under the Night Shift Studios banner, a production house established to exclusively create films in the horror-thriller genre. The film is presented by Night Shift Studios and YNOT Studios.
The latest release from Night Shift Studios is ‘Dies Irae’ on October 31, 2025, starring Pranav Mohanlal, which marks the studio’s second production and reunites the same director and core creative team behind Bramayugam.
About the Academy Museum of Motion Pictures
The Academy Museum is the largest museum in the world devoted to the arts, sciences, and artists of moviemaking. The museum advances the understanding, celebration, and preservation of cinema through inclusive and accessible exhibitions, screenings, programs, initiatives, and collections. Designed by Pritzker Prize–winning architect Renzo Piano, the museum’s campus contains the restored and revitalized historic Saban Building—formerly known as the May Company building (1939)—and a soaring spherical addition. Together, these buildings contain 50,000 square feet of exhibition spaces, two state-of-the-art theaters, the Shirley Temple Education Studio, and beautiful public spaces that are free and open to the public. These include: The Walt Disney Company Piazza and the Sidney Poitier Grand Lobby, which houses the Spielberg Family Gallery, Academy Museum Store, and Fanny’s restaurant and café. The Academy Museum is open six days a week from 10am to 6pm.
Follow Night Shift Studios
For updates and announcements, follow @allnightshifts on Instagram, X, Threads, Facebook, and YouTube.
🔗 https://linktr.ee/allnightshifts
#NightShiftStudios #Bramayugam #DiesIrae