Sunday, May 19
Shadow

ஜெயில் திரை விமர்சனம் (Rank 3.5/5)

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த உட்பட க்ரிக்ஸ் சினிமாஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். சென்னைக்கு வெளியே மறுகுடியமர்வு செய்யப்பட்ட மக்களின் அவலங்களை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிய படமாக ஜெயில் அமைந்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜிவி பிரகாஷின் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

சென்னையில் பூர்வ குடிமக்களை சென்னைக்கு வெளியே அரசு குடியமர்த்துகிறது. அதனைத் தொடர்ந்து அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், பிரச்சனைகள் குறித்தும் பேசும் படமாக ஜெயில் அமைந்திருக்கிறது. குறித்தும் ஜிவி பிரகாஷ் கர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கஞ்சா விற்பனை செய்யும் இரு குழுக்களிடையே ஏற்படும் பிரச்சினையும் அந்த பிரச்சனையில் காவல்துறை, அரசியல் கட்சிகள் இணைந்து கலவரத்தை ஏற்படுத்துகிறது. கடைசியில் என்னாகும் என்பதைக் கொண்டு தான் கதை நகர்கிறது. மேலும், கஞ்சா விற்கும் தன் நண்பன் ராக்கி கொலை செய்யப்படுகிறார்.

அதன்மூலம் ஜிவி பிரகாஷ் உன்னுடைய வாழ்க்கை பல மாற்றங்கள் ஏற்படுகிறது. கடைசியில் ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்? தன் நண்பருக்காக பழி வாங்கினாரா? சேரி மக்களின் நண்பருக்காக மாறியதா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் பிளஸ்:
ஜீவி பிரகாஷ், அபர்ணதி காவிரி, ஜிவி பிரகாஷ் நண்பராக ராக்கி ஆகியோரின் நடிப்பு

படத்தின் மைன்ஸ்:
பல விஷயங்களை பேச வாய்பிருந்தும் அவற்றை தவற விட்டிருப்பது

மொத்தத்தில் ஜெயில் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.