Monday, May 20
Shadow

ஜாஸ்பர் – திரைவிமர்சனம் (ரேங்க் 2.5/5)

ஜாஸ்பர் இள வயதில் ரவுடியாக வலம் வருகிறான். ஊமைப் பெண்ணுடன் காதல் ஏற்பட்டு அவளுக்கு பிள்ளையும் பிறக் கிறது. எதிரிகள் ஜாஸ்பரின் மனைவியை கொல்கின்றனர். இதனால் கதறும் ஜாஸ்பர் தன் பிள்ளையை அனாதை விடுதியில் விட்டுவிட்டு செல்கிறான். தான் அனாதை என்ற எண்ணத்தில் வளரும் அவன் (விவேக் ராஜகோ பால்) தன் தோழியை மணந்து பிள்ளைபெற்று வங்கி மேனேஜராக உயர்கிறான். அவனை தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணும் ஜாஸ்பர் தன் வீட்டை அவர்களுக்கு வாடகை விடுவது போல் விட்டு அருகில் வரவழை கிறார். இந்நிலையில் வங்கி கொள்ளைக் கூட்டம் ஒன்று விவேக்கை கடத்தி செல்கிறது. இதையறிந்து கோபம் அடையும் ஜாஸ்பர் தனி ஆளாக மகனை கடத்தியவர்களை தேடி செல்கி றான். ஜாஸ்பரால் மகனை கண்டு பிடிக்க முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் தருகிறது.

இளவயது ஜாஸ்பர், கடத்தப்படும் வங்கி அதிகாரியாக இரட்டை வேடங்களில் விவேக் ராஜகோபால் நடித்திருக்கிறார்.

வங்கி அதிகாரி கதாபாத்திரத்தை விட இளவயது ஜாஸ்பராக முரட்டுத்தனமாக நடித்திருக்கிறார் விவேக் ராஜகோபால். போலீஸ் என்கவுன்ட்டருக்கு பயந்து போலீஸ் சொல்லும் ரவுடிகளை துரத்தி துரத்தி வெட்டும்போது பயமுறுத்துகிறார் விவேக்.

விவேக்கின் வயதான தோற்றத் தில் வேறு நடிகரை காட்டிவிட்டு இளவயதில் விவேக்கை காட்டுவது குழப்பம். அதற்கு விவேக்கையே வயதான கெட்டப்பிலும் நடிக்க வைத்திருக்கலாம்.
விவேக்கை பிள்ளை என்று ஜாஸ்பர் கூறுகிறார் ஆனால் ஐஸ்வர்யா தத்தாவும் ஜாஸ்பரை அப்பா என்று அழைப்பது மற்றொரு குழப்பம்.

ஹிட்மேனாக வரும் நடிகர் வயதனாலும் வாலிப முறுக்கோடு சண்டைபோடுகிறார்.

கடத்தல் கூட்டம் விவேக்கை கடத்தி அவரது விரல்களை வெட்டி பார்சல் அனுப்புவது திகில்.

கடத்தப்பட்ட கணவனை மீட்க முடியாமல் திணறும் போது ஐஸ்வர்யா தத்தா அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
போலீசாக நடித்திருக்கும் பிரசாந்த் முரளி ஜாஸ்பரை தேடி அலைந்த காலியிட்ட இடங்களை பூர்த்தி செய்திருக்கிறார்.

கிக்கான ஐட்டம் பாடலொன்றும் கண்ணுக்கு விருந்து படைக்கிறது.

டிரம்ஸ் சிவமணி மகன் குமரன் சிவமணி இசை அமைப்பாளராக அறிமுக ஆகியிருக்கிறார். அவரது விறுவிறுப்பும் மெலடியும் படத்துக்கு சுவை கூட்டுகிறது

மணிகண்டராஜாவின் கேமரா இயற்கை சூழலை சார்ந்து பயணித்திருக்கிறது.

யுவராஜ்.டி. ஸ்கிரிப்ட்டில் குழப்பதை தவிர்த்திருந்தால் முழுமையான ஆக்‌ஷன் படமாகியி ருக்கும் .