Tuesday, December 7
Shadow

ஜீவாவின் சீறு படத்தின் டைட்டில் ரகசியம் உடைத்த இயக்குனர் ரத்தின சிவா

பாரதியார் எழுதிய ‘புதிய ஆத்திசூடி’யில் இடம்பெற்ற ‘சீறுவோர்ச் சீறு’ என்ற எழுச்சிமிகு வாக்கியத்திலிருந்து ‘சீறு’ என்ற வார்த்தையை மட்டும் எடுத்துப் படத்தின் தலைப்பாக்கி இருக்கிறோம் என்று டைரக்டர் ரத்தின சிவா விளக்கம் கொடுத்திருந்தது பழைய சேதி.. இந்த சீறு படத்தின் ரன்னிங் டைம் ஜஸ்ட் இ மணி நேரம் 3 நிமிடம்தான் என்பது இப்போ வந்த சேதி

இத்தனைக்கும் இந்த ரத்தின சிவா இயக்கிய முதல் படமான ‘வா டீல்’ இன்னும் வெளியாகவில்லை.. அது குறிச்சு கேட்ட போது
’உள்ளுக்குள் வடுவாக அந்த வருத்தம் உறுத்திக்கொண்டேதான் இருக்கிறது. ஒரு இயக்குநராக என் வேலையைச் சரியாகச் செய்தேன். ஒரு படத்தை இயக்குவதைக் கடந்து வியாபாரரீதியாகப் பல வேலைகள் உள்ளன. அந்தப் படம் வெளியாக வில்லையே எனத் தினமும் நினைவுக்கு வந்துவிடும். என்ன செய்வது? எல்லாமும் நம் கைகளில் இல்லையே?’ எனச் சொன்னார்

அதுவும் சரிதான்..-ன்னு இப்ப வர்ற ஃப்ரைடே ரிலீஸாகப் போற இந்த சீறு படம் குறித்து இயக்குநரிடம் கேட்ட போது ,அநீதிக்குத் துணை போகும் சமூக எதிரிகளுக்கு எதிர் முனையில் நின்று தனது தார்மிகக் கோபத்தை வெளிக்காட்டும் ஒருவனின் வாழ்க்கைப் போராட்டம் இது. கொஞ்சம் புரியும்படி சொல்றதானா படத்தில் மயிலாடுதுறையில் வசிக்கும் நாயகன் ஜீவா அங்கே ஒரு கேபிள் தொலைக்காட்சி நடத்துகிறார். அவரைச் சுற்றி நடக்கும் சம்பவங்களால் அவர் எந்த அளவுக்குத் தார்மிகக் கோபம் கொள்கிறார், அவரது கோபம் அவருக்கு ஆபத்தைக் கொண்டுவந்ததா, இல்லை மாற்றத்தைக் கொண்டுவந்ததா என்பது கதை. ஆக்‌ஷன் கதை என்றாலும் அண்ணன், தங்கைப் பாசம் பிரதான விஷயமாக இருக்கும். சென்னை, மயிலாடுதுறை, விருதுநகர் ஆகிய நகரங்களுக்குக் கதை தாவிச் செல்லும்.

இந்த படத்தில் சிறப்பம்சம் என்னவெனில் நாயகன் நவ்தீப்பை வில்லனாக்கி இருக்கிறோம். நவ்தீப் ஹீரோவாக நடிக்கும்போது ஒரு காட்சியில் கொஞ்சம் கூர்மையாகப் பார்த்தாலே ஒருவிதமான வில்லத்தனம் வெளிப்படும். அந்த எண்ணத்தில்தான் கதையை அவரிடம் சொன்னேன். நடிக்க ஒப்புக்கொண்டார். ஒரு நாயகன் வில்லனாகியிருக்கும் படத்தில் நாம் எந்த மாதிரியான நடிப்பைக் கொடுக்க வேண்டும் என்று ஜீவா தேடத் தொடங்கிவிட்டார். கதை சொன்னபோது தேவையான சந்தேகங்களைக் கேட்டுக்கொண்ட ஜீவா, நான் பரிந்துரைத்த படங்களை எல்லாம் பொறுப்புடன் பார்த்துத் தன் கதாபாத்திரம் எப்படி வெளிப்பட வேண்டும் என்று பயிற்சி எடுத்துக்கொண்டார். அந்த அளவுக்கு இயக்குநர் விரும்பும் கதாபாத்திரத்தைக் கொண்டுவர மெனக்கெடும் நடிகராக ஜீவா இருந்தார். அப்படீன்னார்..

எக்ஸ்ட்ரா நியூஸ்:

முன்னதா இதே சீறு கதையை சிம்புவிடம் சொல்லி ஓகே பண்ணி வைத்திருந்தாராக்கும்

CLOSE
CLOSE