Sunday, May 19
Shadow

ஜிவி 2 திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

ஜிவி படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ளது ஜிவி 2.

சென்னையில் பேச்சுலராக தங்கிக்கொண்டு வேலை செய்யும் ஹீரோ வெற்றியும், கருணாகரனும் ஒரே அறையில் தங்குகிறார்கள். அவர்களது ஹவுஸ் ஓனரான ரோகினி கண் பார்வையற்ற தனது மகளின் திருமணத்திற்காக 50 சரவன் நகை வாங்கி அதை பீரோவில் வைக்க, அந்த பீரோ சாவி எதிர்ப்பாரதவிதமாக தொலைந்துவிடுகிறது. தொலைந்த சாவி ஹீரோ வெற்றியிடம் கிடைக்க, வருமையினால் விரக்தியில் இருக்கும் வெற்றி அந்த சாவியை பயன்படுத்தி நகையை கொள்ளையடித்து விடுவதோடு, தனது புத்திசாலித்தனத்தால் போலீசிடம் சிக்கிக்கொள்ளாமல் எஸ்கேப் ஆகிறார்.

நகை காணாமல் போனது குறித்து போலீஸ் தொடர்ந்து விசாரித்தாலும், வெற்றி தனது சாதுர்யத்தால் போலீசிடம் சிக்காமல் எஸ்கேப் ஆக, கதையில் திடீரென்று ஒரு மாற்றம். அதாவது, ஹவுஸ் ஓனரான ரோகினியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் போல, ஹீரோ வெற்றியின் வாழ்க்கையில் நடக்கிறது. இதை ஒருவித அறிவியல் என்று கணிக்கும் வெற்றி, இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால், தனது நண்பர் கருணாகரன் இறந்துபோவார் என்பதை அறிந்துக் கொள்வதோடு, தனது வாழ்க்கைக்கும், ஹவுஸ் ஓனர் வாழ்க்கைக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன என்பதை அறிய முற்படும் போது, பல அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைப்பதோடு, சில ஆச்சரியமான விஷயங்களும் நடக்கிறது. இதுவே முதல் பாகத்தின் கதை.

இதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள ஜிவி2. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் ஒரு வீட்டில் திருட ஹீரோ வெற்றி முடிவு செய்கிறார். அந்த திருட்டை அவர் செய்தாரா இல்லையா என்பதே இந்த படத்தின் கதை.

படத்தின் பிளஸ்:
வெற்றி, கருணாகரன், ரோகினி ஆகியோரின் நடிப்பு

படத்தின் மைன்ஸ்:
இறுதி காட்சி சரியாக முடிவடையவில்லை

மொத்தத்தில் ஜிவி 2 திரில்லர் ரசிகர்களை கண்டிப்பாக கவரும்.