Monday, May 20
Shadow

கப்ஜா – திரைவிமர்சனம் Rank 3.5/5

கன்னட சினிமா கேஜிஎப் படத்திற்கு பிறகு மிகப் பெரிய வியாபார சந்தையை பெற்றுள்ளது. இதனால் அதேபாணியில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. காந்தாரா, 777 சார்லி போன்ற சில நல்ல படங்களும் இதனால் பயனடைந்துள்ளன. ஆனால் கப்ஜா மாதிரியான திரைப்படங்கள் மீண்டும் கன்னட சினிமாவை பின்நோக்கி கொண்டுபோய் விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. கிச்சா சுதீப், சிவ்ராஜ் குமார், உபேந்திரா என‌ கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார்கள் இணைந்துள்ள கப்ஜா எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

அமராபுரம் என்ற ஊரை இரண்டு பெரும்புள்ளிகள் பிடிக்க கடுமையாக போராடி வருகின்றனர். இருவரும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். இதனால் கணக்கு வழக்கு இல்லாமல் உயிர் பலி ஏற்படுகிறது‌. இவர்கள் பிரச்சனையில் உபேந்திரா உள்ளே வருகிறார். இப்போது அமாராபுரம் உபேந்திரா கண்ட்ரோலுக்கு வர, பிறகு என்ன அவர் இடத்தை காலி செய்ய லோக்கல் டான் முதல் இண்டர்நேஷனல் டான் வரை களத்தில் இறங்க கடைசியில் என்ன ஆனது என்பதே கதை.

எல்லாருமே சூனாபானா ஆகிட முடியுமா என்ற நிலைதான் இப்படத்துக்கும் கேஜிஎப் படத்தை பார்த்து இன்ஸ்பியர் ஆனால் பரவாயில்லை அதற்காக அந்த படத்தை அப்படியேவா எடுத்து வைப்பது. மேக்கிங் தொடங்கி மேக்கப் வரை அப்படி‌ கேஜிஎப் வாடை. கதைக்களம் முதற்கொண்டு எடிட்டிங் வரை அதே தான். போதாக்குறைக்கு பின்னணி இசையும் அதே இரைச்சல். படம் முழுவதும் சுட்டுக்கொண்டும் வெட்டிக்கொண்டும் இருக்கிறார்கள். ஒன்னுமே புரியல. இந்த கொடுமையில் இரண்டாம் பாகம் வேறு வருகிறதாம். முடியலடா சாமி. ஸ்ரேயா அழகாக இருக்கிறார் ஆனால் படத்தில் அவ்வளவு வேலை இல்லை. காட்சிக்கு காட்சி கேஜிஎப் வாசனைதான் வருகிறது. இயக்குனர் சந்துரு புலியை (கேஜிஎப்) பார்த்து சூடு போட்டுக்கொண்டார். பாவம் ரசிகர்கள். ஆள விடுங்கடா சாமி.