
காதல் என்பது பொதுவுடமை – திரைவிமர்சனம்
தமிழில் எத்தனையோ படங்கள் வந்துள்ளன குறிப்பாக காதல் படங்கள் இந்த படம் முற்றிலும் வித்தியாசமான ஒரு காதல் திரைப்படம். என்று தான் சொல்ல வேண்டும் தமிழ் கலாச்சாரத்திற்கு ஒரு முரண்பாடு என கருத்துள்ள படம்தான் ஆனால் இந்த படத்தின் சொல்லிய விதம் நம்மை ஈர்க்க செய்கிறது.
இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். இயக்கத்தில் லிஜோமோல்,வினித்,ரோகிணி,கலேஷ்,தீபா ,அனுஷா, மற்றும் பலர் நடிப்பில் ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவில் கண்ணன் நாராயணன் இசையில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் காதல் என்பது பொதுவுடமை.
கதைக்குள் போகலாம்:
ரோகினி வினித் தம்பதியினர் பெண் தான் லிஜா மோல் ரோகினி வினித் பிரிந்து வாழ்கிறார்கள் அவர்களுக்குள்ள ஒரு கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கின்றனர். ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்க்கிறார்கள். கல்லூரி படிக்கும் போது வேறு பொண்ணுடன் காதல் வயப்படுகிறாள் லிஜா மோல் இதனால் ரோகினையும் விண்ணுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் கடைசியில் இந்த காதல் இணைந்து தான் இல்லையா என்பதே மீதிக் கதை.
தமிழ் சினிமாவுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் இது ஒரு புதுசு ஆனால் வித்தியாசமான திரைக்கதை நம்மை ஈர்க்க வைக்கிறது. அதோடு நம்மை சிந்திக்கவும் வைக்கிறது வாழ்க்கை என்பது கருப்பு வெள்ளை மட்டுமல்ல அதற்குள் நிறைய நிறங்கள் உள்ளது என்பதை மிக அழகாக இயக்குனர் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வித ஆசைகள் உண்டு அந்த ஆசைகளை அவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விடுவது தான் மனித இயல்பு என்பதை மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள் இயக்குனர் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் மிக அற்புதமாக தன் நடிப்பு மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் இயக்குனர் எண்ணம் எந்த அளவுக்கு பலமோ அவரின் திரைக்கதை எந்த அளவிற்கு பலமோ அதேபோல இந்த படத்தில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார்கள் குறைந்த கதாபாத்திரத்தில் நிறைவான ஒரு திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.படத்தின் அடுத்த மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவாளர் ஸ்ரீ சரவணன் காட்சிக்கு காட்சி அற்புதமான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் அதேபோல பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று தான் சொல்ல வேண்டும் 90 நிமிடத்தில் ஒரு மிகச்சிறந்த திரைப்படத்தை கொடுக்க முடியும் என்பதை அற்புதமாக நிரூபித்திருக்கிறார் இயக்குனர் உலக தரத்திற்கான ஒரு படம் அதேபோல இந்திய சினிமாவிற்கு தமிழ் சினிமாவிடம் சவால் என்றும் சொல்லலாம் அனைவரும் இந்த படத்தை ரசிக்க வேண்டும் காண வேண்டும்
மொத்தத்தில் காதல் பொதுவுடமை சமுதாயத்தின் விழிப்புணர்வு