Thursday, August 5
Shadow

கர்ணன் – திரைவிமர்சனம் ( தனுஷ்க்கு மேலும் ஒரு மைல்கள் ) Rank 4.5/5

கர்ணன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று தான் சொல்லணும் அசுரன் வெற்றிக்கு பிறகு தனுஷ்க்கு மிக பெரிய வெற்றி படைப்பு என்று தான் சொல்லணும். கலைபுலி தானுக்கும் சரி மாரி செல்வராஜுக்கும் இது ஒரு முக்கிய படைப்பு . அசுரன் படத்தை விட பல மடங்கு சிறந்த ஒரு படம் என்று தான் சொல்லணும் .

மாரி செல்வராஜ் தமிழ் சினிமா வரலாற்றில் மாபெரும் சிறந்த இயக்குனர் வரிசை வருவார் என்பதில் சிறுது அளவும் ஐயம் இல்லை தன் முதல் படத்தை பல மடங்கு சிறந்த படத்தை கொடுத்துள்ளார். ஒவ்வொரு காட்சியும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது காட்சிகள் மட்டும் அல்ல இவரின் கதாபாத்திரங்களும் நம்மை பிரமிக்க வைக்கிறது . மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை தான் கையாண்டு இருக்கிறார். சரி படத்தின் கதை பார்க்கலாம்.

தூத்துக்குடி மாவட்டடத்தில் கொடியங்குளம் என்ற ஒரு கிராமம் இந்த கிராமத்தில் அடிப்படை விஷயங்கள் கிடையாது ஏன் அந்த ஊரு பஸ் ஸ்டாப் கிடையாது அந்த ஊர் வழியாக பஸ் போகும் ஆனால் நிற்காது இதற்காக பல முறை இந்த கிராமத்து மக்கள் முறையிட்டும் அதற்கான பலன் இல்லை இதனால் அந்த கிராமத்து மக்கள் படிக்க பள்ளி மருத்துவமனை போகணும் என்றால் பக்கத்துக்கு கிராமத்து பஸ் நிலையத்துக்கு போகணும்.

அந்த கிராமத்து மக்கள் இவர்களை மிகவும் மோசமாக நடத்துவார்கள் பெண்களை மட்டும் இல்லை இந்த கிராமத்து மக்களை யும் மிகவும் இழிவு படுத்துவார்கள் இந்த அநிதியை எதிர்த்து குரல் கொடுக்கும். இந்த பிரச்சனைக்கு அமைதிகாக்கும் ஊர் இதை தாங்காமல் கொதித்து எழும் தனுஷ் இதற்க்கு அதரவாக யோகிபாபு மற்றும் சில ஊர் மக்கள் இதை  மீறி இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க துணியும் தனுஷ் இந்த கிராம மக்களுக்கு பிரச்சனையை எப்படி முரியடிக்குறார் என்பது தான் மீதி கதை

படத்தின் கதை நாயகனாக வாழ்ந்து இருக்கிறார் தனுஷ் இவரின் நடிப்பில் மிகவும் ஒரு முதிர்ச்சி இயக்குனரின் நாயகனாக வாழ்ந்து இருக்கிறார். என்று தான் சொல்லணும் காட்சிக்கு காட்சி நடிப்பு மூலம் நம்மை மிரட்டுகிறார் . நிச்சயம் இந்த படத்துக்கும் இவருக்கு மிக பெரிய அந்தஸ்து கிடைக்கும். குறிப்பாக லாலுடன் நடிக்கும் காட்சிகளில் நடிப்பில் ஒரு போட்டி அம்மாடியோ அப்படி ஒரு போட்டி இருவரும் படத்துக்கு மிக பெரிய பலம் என்று தான் சொல்லணும் இந்த இரு கதாபாத்திரங்கள் தான் படத்தின் மிக பெரிய பலம்

லால் இந்திய சினிமாவுக்கு இவர் ஒரு வரம் என்று தான் சொல்லணும் நடிப்பில் நம்மை மிரட்டுகிறார். படத்தில் சண்முகநாதன் யோகி பாபு ஜி.எம். குமார் பிரியாலக்ஷ்மி , 96 நாயகி கெளரி என்று விரல் விட்டு என்னும் அளவில் தான் நமக்கு தெரிந்த முகங்கள் மற்றபடி அந்த கிராமத்து மக்கள் பல முக்கிய பாத்திரங்களில் நடித்து கதாபத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.ஏன் படத்தின் மிகபெரிய பலமே அவர்கள் என்று சொல்லலாம் .

படத்துக்கு மேலும் பலம் நட்டியின் வில்லத்தனம் தான் உதவி கமிஷனராக வரும் நட்டி  கொடியங்குளம் கிராமத்து மக்கள் தனக்கு மரியாதை தரவில்லை என்றும் இந்த கிராமத்து மக்கள் எல்லாம் நெஞ்சை நிமிர்த்தினால் அது தப்பு என்று சொல்லும் காட்ச்சிகளில் மிகவும் மோசமான வில்லதனைத்தை காட்டி நம்மை அசத்தியுள்ளார் .

படத்தின் நாயகியாக மலையாள நடிகை ரெஜிஷா மிகவும் நேர்த்தியான நடிப்பை கொடுத்து இருக்கிறார் ஒரு கேரளா பெண் தமிழ் மண் வாசத்தை உணர்ந்து மிகவும் சிறப்பாக நடித்து இருக்கிறார்.

படத்தின் மிகபெரிய பலம் சந்தோஷ் நாராயணனின் இசை ஒவ்வொரு பாடல்களும் மிகவும் நம்மை ரசிக்க வைக்கிறது அதோடு கதை காலத்துக்கு ஏற்ப பின்னணி இசை அதோடு ஒளிபதிவாளர் தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப காட்சியமைப்பு கண்களுக்கு குளிர்ச்சி

மொத்தத்தில் கர்ணன் தமிழ் சினிமா பிரம்மாஸ்திரம்

 

CLOSE
CLOSE