Monday, November 9
Shadow

மருத்துவ உலகின் மர்மங்களை மையமாகக் கொண்டதா ‘RX’? – நாசர், ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் வெளியீடு!

மருத்துவ உலகின் மர்மங்களை மையமாகக் கொண்டதா ‘RX’? – நாசர், ரெஜினா கசாண்ட்ரா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் வெளியீடு!

லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘RX’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களுடன் கவனம் பெற்ற இயக்குநர் விஷால் வெங்கட், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கியுள்ளார். நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் தலைப்பும், தற்போது வெளியாகியுள்ள போஸ்டர்களும் படத்தின் கதைக்களம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. குறிப்பாக, மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது பயன்படுத்தும் ‘RX’ என்ற குறியீட்டையே படத்தின் தலைப்பாக வைத்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மருத்துவத் துறையின் பின்னணியில் நடைபெறும் மர்மங்கள் அல்லது மெடிக்கல் மாஃபியாவை மையமாகக் கொண்ட கதையாக இருக்குமோ என்ற ஆர்வம் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரெஜினா கசாண்ட்ரா முகக்கவசம் அணிந்தபடி, தீவிரமான பார்வையுடன் காட்சியளிக்கிறார். அதேபோல், செகண்ட் லுக் போஸ்டரில் ரயில் பயணத்தின் போது அச்சத்துடன் காணப்படும் அவரது தோற்றம், கதையில் ஏதோ ஒரு மர்மமான சம்பவம் இடம்பெறலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இரண்டு போஸ்டர்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

டிராமா திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் கதையை ஹரிஹரன் ராஜு எழுதியுள்ளார். ஆஷாமீரா ஐயப்பன் வசனங்களை எழுதியுள்ளார். எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பையும், ஆர்.கே. மனோஜ் குமார் தயாரிப்பு வடிவமைப்பையும் கவனித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் முதன்முறையாக இணைந்து தயாரிக்கும் தமிழ்ப் படம் என்பதும் ‘RX’ படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஒய். ரவிசங்கர், நவீன் யெர்னேனி, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். பிரதீப் பூபதி இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் தலைப்பு மற்றும் இரண்டு புதிய போஸ்டர்களைத் தொடர்ந்து, கதைக்களம், வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட அடுத்தடுத்த அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

மருத்துவ உலகின் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மங்களைப் பேசப்போகிறதா ‘RX’? அல்லது முற்றிலும் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட கதையாக உருவாகியுள்ளதா? படக்குழுவின் அடுத்தடுத்த அறிவிப்புகள் இதற்கான விடையைத் தரும் என எதிர்பார்க்கலாம்.

தொழில்நுட்பக் குழு

  • நடிகர்கள்: நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி.
  • இயக்கம்: விஷால் வெங்கட்
  • கதை: ஹரிஹரன் ராஜு
  • வசனம்: ஆஷாமீரா ஐயப்பன்
  • ஒளிப்பதிவு: எஸ்.கே. செல்வகுமார்
  • இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
  • படத்தொகுப்பு: ஜி.கே. பிரசன்னா
  • தயாரிப்பு வடிவமைப்பு: ஆர்.கே. மனோஜ் குமார்
  • ஆடை வடிவமைப்பு: ஜீவா காருண்யா
  • பாடல்கள்: கார்த்திக் நேத்தா, விஷ்ணு எடவன்
  • ஒலி வடிவமைப்பு: அருண் எஸ். மணி (Oli Sound Labs)
  • ஒலி கலவை: எம்.ஆர். ராஜகிருஷ்ணன் (RK Studios)
  • ஒப்பனை: விஜய் ராஜ்
  • VFX மேற்பார்வை: ஜி.இ. அசோக் குமார்
  • DI: Mango Post
  • வண்ணத் திருத்தம்: ஃபிராங்க்ளின் (Mango Post)
  • விளம்பர வடிவமைப்பு: வியாகி

தயாரிப்பு நிறுவனங்கள்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ஜீ ஸ்குவாட்.

தயாரிப்பாளர்கள்: ஒய். ரவிசங்கர், நவீன் யெர்னேனி, லோகேஷ் கனகராஜ்.

இணைத் தயாரிப்பாளர்: பிரதீப் பூபதி.

தலைமைச் செயல் தயாரிப்பாளர்: ஏ. ஜெய்சம்பத்.

தயாரிப்பு நிர்வாகி: பி.எல். பாலாஜி.

தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: எம். கோவிந்தராஜ்.

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, திரு.

Is ‘RX’ a Medical Mystery Thriller? First Look and Second Look Posters of Lokesh Kanagaraj’s Production Starring Nassar and Regina Cassandra Unveiled!

The much-anticipated Tamil film ‘RX’, jointly produced by Lokesh Kanagaraj’s G Squad and leading production house Mythri Movie Makers, has officially been titled ‘RX’. The makers have unveiled the film’s first-look and second-look posters on the occasion of Diwali, creating considerable curiosity among movie enthusiasts.

Directed by Vishal Venkat, who previously helmed ‘Sila Nerangalil Sila Manidhargal’ and ‘Bomb’, the upcoming film features Nassar, Regina Cassandra, Ramesh Thilak and Sreeja Ravi in prominent roles.

The film’s title and newly released posters have sparked considerable curiosity about its storyline. The title ‘RX’, commonly associated with medical prescriptions written by doctors, has particularly caught the attention of audiences. This has led to speculation that the film could explore the mysterious world of the medical industry, possibly touching upon the concept of a medical mafia.

The first-look poster features Regina Cassandra wearing a face mask, with an intense and determined expression. The second-look poster presents her in what appears to be a tense and frightening situation during a train journey. These intriguing visuals have further heightened expectations surrounding the film.

Billed as a drama thriller, ‘RX’ has its story written by Hariharan Raju, while Aashameera Aiyappan has penned the dialogues. S.K. Selvakumar is handling the cinematography, and Hesham Abdul Wahab is composing the music. G.K. Prasanna is in charge of editing, while R.K. Manoj Kumar oversees the production design.

The film marks the first-ever Tamil collaboration between Lokesh Kanagaraj’s G Squad and Mythri Movie Makers, one of India’s leading production houses. It is jointly produced by Y. Ravi Shankar, Naveen Yerneni and Lokesh Kanagaraj. Pradeep Boopathy serves as the co-producer.

With filming successfully wrapped up, the project is currently in the post-production stage, with the technical work progressing at a brisk pace.

Following the announcement of the title and the release of the two intriguing posters, audiences are eagerly looking forward to further updates from the team, including details about the film’s storyline and release date.

Will ‘RX’ unravel the hidden mysteries of the medical world, or will it offer an entirely unexpected thriller experience with gripping twists and turns? The film’s upcoming announcements are expected to offer more clues about this intriguing project.

Cast:

  • Nassar
  • Regina Cassandra
  • Ramesh Thilak
  • Sreeja Ravi

Technical Crew:

  • Director: Vishal Venkat
  • Story: Hariharan Raju
  • Dialogues: Aashameera Aiyappan
  • Cinematography: S.K. Selvakumar
  • Music: Hesham Abdul Wahab
  • Editing: G.K. Prasanna
  • Production Design: R.K. Manoj Kumar
  • Costume Design: Jeeva Karunya
  • Lyricists: Karthik Netha, Vishnu Edavan
  • Sound Design: Arun S. Mani (Oli Sound Labs)
  • Sound Mixing: M.R. Rajakrishnan (RK Studios)
  • Makeup: Vijay Raj
  • VFX Supervisor: G.E. Ashok Kumar
  • DI: Mango Post
  • Colourist: Franklin (Mango Post)
  • Publicity Designs: Vyagi

Production Houses: Mythri Movie Makers and G Squad.

Producers: Y. Ravi Shankar, Naveen Yerneni and Lokesh Kanagaraj.

Co-Producer: Pradeep Boopathy.

Chief Executive Producer: A. Jaisambath.

Production Executive: P.L. Balaji.

Production Controller: M. Govindaraj.

Public Relations: Suresh Chandra and Thiru.