Sunday, May 19
Shadow

கட்டா குஸ்தி – திரைவிமர்சனம் (மனதை வருடும்) Rank 4/5

கட்டா குஸ்தி இந்த வார ரிலீஸில் மிக சிறந்த பொழுதுபோக்கு அதோடு மிக சிறந்த வாழ்வியல் அர்த்ததயும் சொல்லும் படம். இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி கருணாஸ் காலி வெங்கட் முனீஸ்காந்த் ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிப்பில் செல்ல அய்யாவு இயக்கத்தில் ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவில் ஜஸ்டின் இசையில் வெளிவந்து இருக்கும் படம் .

கட்டா குஸ்தி என்றதும் இது ஒரு சண்டை படம் மல்யுத்த போட்டி என்று எல்லாம் தோன்றும் ஆனால் அது தான் இல்லை ஆனாலும் மல்யுத்தம் இருக்கு. இந்த கட்டா குஸ்தி கணவன் மனைவிக்குள் நடக்கும் மல்யுத்ததை தான் மிகவும் கலகலவென சிரிக்கும் படி கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.

பொள்ளாச்சியில் மைனர் போல சுற்றி திரியும் ஹீரோ விஷ்ணு விஷால் மாமாவாக வரும் கருணாஸ் இவர் தான் கதையின் பலம் மாப்பிள்ளைக்கு பொண்ணு பார்க்கும் மாமா கருணாஸ் மாப்பிள்ளையின் விதிகளுக்கு பொண்ணு கிடைக்கவில்லை இந்த சூழ்நிலையில் கேரளாவில் மல்யுத்த வீராங்கனை ஐஷ்வர்யா லக்ஷ்மி விஷ்ணு விஷால் போடும் அத்தனை விதிகளுக்கும் பொருத்தம் இல்லாத பெண் இவர்களுக்கு ஆகும் திருமணம் இந்த திருமணத்தால் ஏற்படும் பிரச்சினைகளை மிகவும் அழகாக இரண்டாம் பகுதியில் உணர்ச்சி பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

முதல் பகுதி பெண் தேடும் படலமும் சரி ஐஷ்வர்யா லக்ஷ்மி மல்யுத்த போட்டி காட்சிகளும் குறிப்பாக கல்யாணம் ஆகி முதல் இரவு காட்ச்ச்சியும் சரி நம்மை வயரு வலிக்குற அளவுக்கு சிரிக்க வைக்கிறார் இயக்குனர் இயக்குனர் எண்ணத்தை புரிந்து படத்தினl அனைவரும் மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்கள் என்று சொன்னால் மிகைாகாது.

படத்தில் நாயகன் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக வளம் வந்து இருக்கிறார் என்று தான் சொல்லணும் இதேவே இந்த படத்தின் மிக பெரிய வெற்றி என்று சொல்லணும் நாயகிக்கு எங்கு முக்கியத்தவம் கொடுக்க வேண்டும் என்று உணர்ந்து நடித்து இருப்பது பாரடட வேண்டிய விஷயம்

படத்தின் பலம் உயிர் என்றால் அது ஐஸ்வர்யா லட்சுமி தன கதாபாத்திரம் உணர்ந்து நடித்து இருக்கிறார். குறிப்பாக சண்டை காட்சிகளில் நம்மை மிரட்டுகிறார்.அதிலும் மல்யுத்த காட்சிகளில் மிகவும் பயிற்சி வாய்ந்த ஒரு குஷுதி வீரர் போல சண்டை காட்சிகளில் மிளிக்கிறார். நமக்கு மீண்டும் ஒரு விஜயசாந்தி கிடைத்தது போல பெருமை தோன்றுகிறது இவரின் ஆவேச நடிப்பும் சண்டைக்காட்சிகளும்.தமிழ் சினிமாவில் இல்லை இல்லை இவர் இந்திய சினிமாவுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று தான் சொல்லணும்

படத்தின் மற்றும் பிளஸ் நடிகர்கள் என்று சொன்னால் கருணாஸ் காலி வெங்கட் முனிஷ் காந்த் படம் முழுக்க நம்மை நகைச்சுவையில் திக்கு முக்காட வைக்கிறார்கள் .

படத்தின் இயக்குனர் செல்ல அய்யாவு   தான் மிக சிறந்த கமர்சியல் இயக்குனர் அதோடு உணர்வு பூர்வமான கதைக்களத்தை நகைச்சுவையாக சொல்ல முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார். நிச்சயம் இவரை கோலிவுட் சிவப்பு கமபலம் விரிக்கும் .

மொத்தத்தில் கட்டா குஸ்தி மனதை வருடும் உணர்வு